முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி சென்னை வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு : மருத்துவத்துறை செயலாளர் பேட்டி

சனிக்கிழமை, 3 ஜூன் 2023      தமிழகம்
Kagan-Deep-Singh-Padi 2023-

Source: provided

சென்னை : ஒடிசா விபத்தில் சிக்கி சென்னை வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மருத்துவத் துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி விளக்கம் அளித்துள்ளார். 

ஒடிசாவில் நேற்று முன்தினம் இரவு 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த ரயில் விபத்தில் சிக்கி சிறப்பு ரயில் மூலம் சென்னை வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மருத்துவத் துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 

6 மருத்துவக் குழுக்கள் ஆம்புலன்ஸ் வாகனத்துடன் தயார் நிலையில் உள்ளது. ஒடிசாவில் இருந்து வருபவர்களுக்கு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

ராஜீவ் காந்தி மருத்துவமனையின் அவரச சிகிச்சை பிரிவில் 40 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. சிறிய காயம் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க 200 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. ஸ்டான்லி, ஓமந்தூரார், கீழ்பாக்கம் மருத்துவமனைகளிலும் படுக்கைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. . 

தேவைப்பட்டால் ஒடிசா செல்ல மருத்துவர்களின் பட்டியல் தயார் நிலையில் உள்ளது. மருத்துவர்களும் தயார் நிலையில் உள்ளனர்.  இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து