எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பாட்னா : பீகாரில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்தது தொடர்பாக விளக்கமளித்த முதல்வர் நிதிஷ் குமார், பாலம் தவறாக வடிவமைக்கப்பட்டுள்ளது, குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
பீகார் மாநிலத்தின் அகுவானிகாட் மற்றும் சுல்தான்கஞ்ச்-ஐ இணைக்கும் வகையில் கங்கை நதியின் மீது கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்துவிழும் வீடியோ ஒன்று ஞாயிற்றுக்கிழமை சமூகவலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டது.
இந்த நிலையில் பாலம் இடிந்த ஒருநாளுக்கு பின்னர் அதுகுறித்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கருத்து தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய அவர்," இடிந்து விழுந்த பாலம், ஏற்கனவே கடந்த ஆண்டும் இடிந்து விழுந்திருக்கிறது. தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். அந்த பாலம் சரியாக திட்டமிட்டு கட்டப்படாததால் மீண்டும் மீண்டும் இடிந்து விழுகிறது. துறை ரீதியிலான அதிகாரிகளின் ஆய்வுக்கு பின்னர் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக, மாநிலத் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அந்தப் பாலத்தின் கட்டுமானத்தில் தீவிமார குறைபாடுகளை நிபுணர்கள் கண்டறிந்ததால், பாலம் இடிந்தது திட்டமிடப்பட்டதே. கடந்த ஆண்டு பெய்த மழையின் போது ஏற்பட்ட இடி மின்னல் காரணமாக பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது" என்று தெரிவித்திருந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


