முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மூத்த தலைவர்களை கட்சி பணிக்கு அனுப்ப திட்டம்

வியாழக்கிழமை, 8 ஜூன் 2023      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

புதுடெல்லி: டெல்லியில் அடுத்தடுத்து நடந்த ஆலோசனை கூட்டங்களின் அடிப்படையில் சில அதிரடி மாற்றங்களுக்கும் பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். அதன்படி மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வருகிற 23-ந் தேதி பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு அவர் ஏற்பாடு செய்துள்ளார். பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான முதல்கட்ட ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் செய்யத் தொடங்கிவிட்டது.

குறிப்பாக பாராளுமன்றத் தேர்தலுக்கு தேவைப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கணக்கிடும் பணி அனைத்து மாநிலங்களிலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த மாதம் மாவட்டம் வாரியாக மின்னணு எந்திரங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளன.

பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்த வேண்டும் என்பதில் எதிர்க் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக உள்ளன. எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவருமான நிதிஷ்குமார் செய்து வருகிறார்.

வருகிற 23-ந் தேதி பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு அவர் ஏற்பாடு செய்துள்ளார். இதில் 15 கட்சிகளின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று தெரிய வந்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகள் அடுத்தடுத்து மேலும் தீவிரமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கடந்த சில தினங்களாக டெல்லியில் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஒவ்வொரு மாநிலத்திலும் மேற்கொள்ள வேண்டிய கூட்டணி மற்றும் போட்டியிட வேண்டிய தொகுதிகள் குறித்து அவர் பட்டியல் தயாரித்துள்ளார். இதன் அடிப்படையில் கூட்டணி ஒப்பந்தங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் டெல்லியில் அடுத்தடுத்து நடந்த ஆலோசனை கூட்டங்களின் அடிப்படையில் சில அதிரடி மாற்றங்களுக்கும் பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். ஆட்சியிலும், கட்சியிலும் சில முக்கிய மாற்றங்கள் செய்வதன் மூலம் பாராளுமன்றத் தேர்தலை வலுவாக எதிர்கொள்ள முடியும் என்று அவர் கருதுகிறார்.

அதன்படி மத்திய மந்திரி சபையில் சிறு மாற்றம் செய்யலாமா? என்று பிரதமர் மோடி ஆலோசித்து வருகிறார். வருகிற 22-ந் தேதி மோடி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதற்கு முன்னதாக மத்திய மந்திரி சபையில் அவர் மாற்றம் செய்வார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

சில மூத்த மந்திரிகளின் நிர்வாகப் பணிகளில் பிரதமர் மோடிக்கு ஏற்கனவே அதிருப்தி உள்ளது. அவர்களை மந்திரி சபையில் இருந்து விலக்கி விட்டு புதியவர்களை நியமிக்க ஆலோசித்து வருகிறார். நீக்கப்படும் மத்திய மந்திரிகள் கட்சிப் பணிக்கு அனுப்பப்படுவார்கள் என்று தெரிய வந்துள்ளது.

வேளாண்மை, விமானப் போக்குவரத்து, நிதி, நீர்ப் பாசனம், சுற்றுச்சூழல், மின்சாரம், ஊரக மேம்பாடு ஆகிய அமைச்சகங்களில் மாற்றங்கள் செய்ய மோடி விரும்புவதாக கூறப்படுகிறது. அதற்கேற்ப மந்திரி சபை மாற்றங்கள் அமையும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து