முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. தொடர்பான ஓ.பி.எஸ். வழக்கு விசாரணை ஜூன் 12-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

வெள்ளிக்கிழமை, 9 ஜூன் 2023      தமிழகம்      அரசியல்
ADMK 20221 02 02

சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலர் தேர்வு, பொதுக்குழுதீர்மானங்களை எதிர்த்த ஓபிஎஸ் வழக்கு ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றம் நடைபெற்று வருகிறது. இந்த மனு மீதான விசாரணை கோடை விடுமுறை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், ஒரு மாதத்துக்குப் பிறகு வியாழக்கிழமை மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது. இந்த மேல்முறையீட்டு வழக்கில் அ.தி.மு.க. மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்து தீர்மானம் நிறைவேற்றிய பிறகே ஓபிஎஸ் நீக்கம் செய்யப்பட்டார். 

கட்சியின் அனைத்து விதிகளும் மாறுதலுக்கு உட்பட்டது என்கிற வாதம் இபிஎஸ் தரப்பில் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து இவ்வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஜூன் 12ஆம் தேதிக்கு (வரும் திங்கட்கிழமைக்கு ) ஒத்திவைத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 weeks 1 day ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 2 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 2 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து