எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : அ.தி.மு.க - பா.ஜ.க. இடையே கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், டெல்லியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் முகாமிட்டுள்ளனர். அமித்ஷாவை சந்திக்க முன்னாள் அமைச்சர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசுகையில், அண்ணா குறித்து அவர் பேசிய கருத்துகள் பரபரப்பையும், அ.தி.மு.க.வினரிடையே சலசலப்பையும் ஏற்படுத்தியது. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் அண்ணாமலைக்கு எதிரான கருத்துகளை கூறி வந்தனர். இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எங்களை வைத்து தான் பா.ஜ.க.வுக்கு அடையாளமே இருக்கிறது. இனி அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இல்லை என்று கூறியிருந்தார்.
அது மட்டுமல்லாது, இதை வரவேற்கும் விதமாக அ.தி.மு.க.வினர் ஆங்காங்கே போஸ்டர் அடிக்க தொடங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல பா.ஜ.க.வினரும் ஆங்காங்கே பதில் போஸ்டர் ஒட்டி வந்தனர். இந்த மோதல் போக்கை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் சமூக வலைதளங்களிலோ, பொதுவெளியிலோ அ.தி.மு.க. குறித்தோ, கூட்டணி குறித்தோ விமர்சிக்க வேண்டாம் என்று பா.ஜ.க.வினருக்கு அக்கட்சி தலைமை அறிவுறுத்தியதாக கூறப்பட்டது. அதை தொடர்ந்து இந்த விவகாரத்தில் அ.தி.மு.க.வும் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வாய்மொழி உத்தரவையடுத்து அமைதி காத்து வந்தது.
இந்த நிலையில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேபி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சிவி சண்முகம், வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட 5 முன்னாள் அமைச்சர்கள் டெல்லி சென்றுள்ளனர். கொச்சி வழியாக டெல்லி சென்றதாகவும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அமித்ஷாவிடம் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குறித்து முறையிட திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –16-01-2026
16 Jan 2026


