முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள மூதாட்டியிடம் வீடியோ காலில் பேசிய போப் பிரான்சிஸ்

சனிக்கிழமை, 23 செப்டம்பர் 2023      இந்தியா
Pope-Francis 2023-09-23

Source: provided

திருவனந்தபுரம் : தன்னிடம் வீடியோ கால் மூலம் போப் பிரான்சிஸ் பேசியது இன்ப அதிர்ச்சியாக இருந்தது என்று கேரளாவை சேர்ந்த மூதாட்டி சோசம்மா ஆண்டனி தெரிவித்துள்ளார். 

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரி பகுதியை சேர்ந்த 95 வயது மூதாட்டி சோசம்மா ஆண்டனி. இவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். சோசம்மாவின் பேரன் ஜார்ஜ் கூவக்காட். கடந்த 2-ம் தேதி மூதாட்டி சோசம்மா வீட்டில் இருந்த செல்போனுக்கு வாடிகன் நகரில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. 

அதில் போப் ஆண்டவர் புனித போப் பிரான்சிஸ் பேசினார். அவர் மூதாட்டி சோசம்மாவுடன் வீடியோ காலில் பேசினார். போப் பிரான்சிஸ் இத்தாலிய மொழியில் பேசினார். மூதாட்டி சோசம்மா மலையாளத்தில் பதிலளித்தார். 

இருவரது உடையாடல்களும், இருவரும் புரிந்து கொள்ளும் வகையில் மொழிபெயர்ப்பு செய்து தெரிவிக்கப்பட்டது. அதன் மூலம் இருவரும் சுமார் 4 நிமிடங்கள் வரை பேசினர். திடீரென போப் பிரான்சிஸ் வீடியோ காலில் தன்னுடன் பேசியது மூதாட்டி சோசம்மாவுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. 

அவர் உற்சாக மிகுதியில் போப் ஆண்டவரை பார்த்து கையால் சைகை காண்பித்தார். அதற்கு அவரும் பதிலுக்கு கையால் சைகை காண்பித்தார். இருவரும் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டனர். 

கடந்த 2022-ம் ஆண்டு கனடாவுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த போது, மூதாட்டி சோசம்மாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. சோசம்மாவின் பேரன் ஜார்ஜ் கூவக்காட் போப் பிரான்சிஸ்-ன் வெளிநாட்டு பயணங்களை ஒருங்கிணைக்கும் நெருக்கமான குழு ஒன்றில் இருக்கிறார். இதனால் மூதாட்டி சோசம்மா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது போப் பிரான்சிசுக்கு தெரியவந்தது. 

பின்பு தொற்று குணமாகி நாடு திரும்பினார் சோசம்மா. அதன் பிறகு கேரளாவிலேயே இருந்து வந்தார். இந்தநிலையில் அவரது பேரனான ஜார்ஜ் கூவக்காட்டுக்கு தற்போது உடல் நிலை பாதிக்கப்பட்டு உள்ளது. அவரது நலன் பற்றி விசாரிப்பதற்காக போப் பிரான்சிஸ் போனில் வீடியோ காலில் வந்து மூதாட்டி சோசம்மாவிடம் பேசியுள்ளார். 

மூதாட்டி சோசம்மாவுடன் போப் பிரான்சிஸ் பேசிய போது, அவரது வீட்டில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர். அவர்கள் மூதாட்டியுடன் போப் பிரான்சிஸ் வீடியோ காலில் பேசுவதை பார்த்து உற்சாகம் அடைந்தனர். போப் பிரான்சிஸ் போனில் வீடியோ காலில் பேசியது குறித்து கேட்டபோது, அவருக்காக பிரார்த்தனை செய்வேன் என்று கூறியதாகவும், அதற்கு அவர் எனது பிரார்த்தனை தனக்கு தேவை என்றும் தெரிவித்ததாகவும் மூதாட்டி சோசம்மா கூறினார். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து