முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ம.பி. சட்டசபை தேர்தல்: பா.ஜ.க.வின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியீடு : மத்திய அமைச்சர் தோமர் அறிவிப்பு

சனிக்கிழமை, 23 செப்டம்பர் 2023      இந்தியா
Narendra-Singh-Tomar 2023-0

Source: provided

போபால் : மத்திய பிரதேச சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ.க.வின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களின் சட்டசபைகளுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இம்மாநிலங்களில் தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. தற்போதே ஆயத்தமாகி வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. அண்மையில் வெளியிட்டது. 

இந்த நிலையில், மத்திய பிரதேச சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ.க.வின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக போபாலில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் கூறியதாவது, 

தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே சில வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்டதன் மூலம் பா.ஜ.க. தைரியத்தை நிரூபித்துள்ளது.  இரண்டாம்கட்ட பட்டியலை தயாரிப்பதற்கான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. எங்கள் பட்டியல் விரைவில் வெளியாகும். முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய பிரதேசத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

பா.ஜ.க. முதற்கட்டமாக 39 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை ஆகஸ்ட் 17-ம் தேதி வெளியிட்டது என்பது குறிப்பித்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து