முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆட்டோவில் பயணித்தபடி வாக்கு சேகரித்த ராகுல் காந்தி

செவ்வாய்க்கிழமை, 28 நவம்பர் 2023      இந்தியா      அரசியல்
Rahul-Gandhi-2023-11-28

ஐதராபாத், தெலுங்கானாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆட்டோவில் பயணித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. 

தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு  நாளை நடைபெறவுள்ளது. நேற்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைந்த  நிலையில்  தெலுங்கானாவில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். 

காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் இணைந்து  பொதுக் கூட்டத்தில் பங்கேற்றனர். முன்னதாக, ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் உணவு விநியோகிக்கும் தொழிலாளர்களுடன் அவர்கள் சந்திக்கும் அன்றாட பிரச்சினைகள் குறித்து ராகுல்காந்தி உரையாடினார்.

இதனைத் தொடர்ந்து, ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஆட்டோவில்  பயணித்தபடி ஊர்வலமாக வந்து மக்களிடம் வாக்கு சேகரித்தனர். சமீபகாலமாக விவசாயிகள், கூலித் தொழிலாளிகள், லாரி ஓட்டுநர்கள் எனப் பல்வேறு தரப்புனரை நேரில் சந்தித்து ராகுல் காந்தி உரையாடி வருவது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து