முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரலாறு காணாத புதிய உச்சம்: பவுன் ரூ.47 ஆயிரத்தை கடந்தது தங்கம் விலை

சனிக்கிழமை, 2 டிசம்பர் 2023      வர்த்தகம்
Gold 2022-12-31

சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை ரூ.47 ஆயிரத்தை கடந்து வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டி வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை ரூ.47 ஆயிரத்தை கடந்து வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 520 உயர்ந்து ரூ.47,320-க்கும், ஒரு கிராம் ரூ.5,915-க்கும் விற்பனையானது. 

அடுத்த வாரத்தில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.6 ஆயிரத்தை எட்டும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது, அதே போல வெள்ளியின் விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ரூ.83.50-க்கும் ஒரு கிலோ ரூ.83,500-க்கும் விற்பனை செய்யப்பட்டது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து