முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்பேத்கர் வழியை அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டும் : சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி

புதன்கிழமை, 6 டிசம்பர் 2023      இந்தியா
Supreme-Court 2023-04-06

Source: provided

புதுடெல்லி : 75 ஆண்டுகளுக்கு முன்பு அம்பேத்கர் வகுத்த அடிப்படைக் கோட்பாடுகளை நீதித்துறை பின்பற்றி வருகிறது. இந்த நாள் பொன் எழுத்துகளால் எழுதப்பட்டுள்ளது என இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார். டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 67-வது நினைவு தினத்தையொட்டி அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 67-வது நினைவு தினம் நேற்று (டிச.6) அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் சிலைக்கு நேற்று இந்திய தலைமை நீதிபதி மற்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இதையடுத்து அவர் ஒரு தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்தப்பேட்டியில், "இந்த நாள் பொன் எழுத்துகளால் எழுதப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் வாழ்க்கையை நாம் நினைவுகூர்கிறோம்.

75 ஆண்டுகளுக்கு முன்பு அம்பேத்கர் வகுத்த அடிப்படைக் கோட்பாடுகளை நீதித்துறை பின்பற்றி வருகிறது. எனவே இது எங்களுக்கு முக்கியமான நாள். இந்த ஆண்டு, சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் சிலை திறக்கப்பட்டது. அதன்மூலம் அவர் நம்முடன் இருப்பதாக உணர்த்தப்படுகிறது. அம்பேத்கரின் வாழ்வியல் கருத்துகளையும், கொள்கைகளையும் இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் என அனைவரும் பின்பற்ற வேண்டும். இந்த சட்ட கருத்தியல் என்பது நீதிபதிகள், வழக்கறிஞர்களுக்கானது மட்டுமல்ல. அனைத்து தரப்பு மக்களுக்குமானது” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து