முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிசோரம் மாநில முதல்வராக இன்று லால்டுஹோமா பதவியேற்கிறார்

வியாழக்கிழமை, 7 டிசம்பர் 2023      இந்தியா
Lalduhoma-2023-12-07

ஜஸால், மிசோரம் மாநில முதல்வராக லால்டு ஹோமா இன்று பதவியேற்கிறார். 

வடகிழக்கு மாநிலமான மிசோரமில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 7-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற்றது. மொத்தம் 8.57 லட்சம் வாக்காளா்களைக் கொண்ட இந்த மாநிலத்தில் 82 சத வீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகின. கடந்த 4-ம் தேதி (திங்கட் கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

மாநிலத்தில் ஏற்கெனவே ஆட்சியில் இருந்த மிசோ தேசிய முன்னணியை வீழ்த்தி, மற்றொரு பிராந்திய கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியைக் கைப்பற்றியது. இக்கட்சி 27 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மிசோ தேசிய முன்னணிக்கு 10 இடங்கள் கிடைத்தன. பா.ஜ.க. 2 இடங்களை மட்டுமே கைப்பற்றிய நிலையில், காங்கிரசுக்கு ஓரிடம்தான் கிடைத்தது.

இந்நிலையில், ஜோரம் மக்கள் இயக்கம் கட்சியின் புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. இதில் முதல்வராக கட்சித் தலைவா் லால்டுஹோமா தோ்வு செய்யப்பட்டார்.  இதைத் தொடா்ந்து, அம்மாநில கவர்னர் ஹரி பாபுவை நேற்று முன்தினம் சந்தித்த லால்டுஹோமா, ஆட்சியமைக்க உரிமை கோரினார். 

அதை தொடர்ந்து மாநில முதல்வராக  லால்டுஹோமா இன்று (வெள்ளிக்கிழமை) பதவியேற்க உள்ளதாக கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 74 வயதாகும் லால்டு ஹோமா, முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் பாதுகாப்புப் பொறுப்பு அதிகாரியாக இவர் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து