எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐதராபாத், தெலுங்கானா மாநில முதல்வராக நேற்று பதவியேற்றுக் கொண்ட ரேவந்த் ரெட்டிக்கு பிரதமர் மோடி, முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தெலுங்கானா மாநில முதல்வராக நேற்று ரேவந்த் ரெட்டி பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து 20 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு மல்லிகார்ஜூன கார்கே சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், தெலுங்கானாவின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள ரேவந்த் ரெட்டிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். அதில்,
தெலுங்கானா மாநிலத்தின் முதல்வராக பதவி ஏற்றிருக்கும் ரேவந்த் ரெட்டிக்கு வாழ்த்துகள். மாநில வளர்ச்சி மற்றும் குடிமக்களின் நலனுக்காக தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்பதை உறுதி அளிக்கிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா முதல்வராக பதவியேற்றுள்ள ரேவந்த் ரெட்டிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தெலுங்கானா முதல்வராக பதவியேற்று உள்ள ரேவந்த் ரெட்டிற்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வராக அவரது பதவிக்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –16-01-2026
16 Jan 2026


