Idhayam Matrimony

சர்ச்சை பேச்சு விவகாரம்:ஏ.வி.ராஜூக்கு நடிகை த்ரிஷா நோட்டீஸ்

வியாழக்கிழமை, 22 பெப்ரவரி 2024      தமிழகம்
3-sha

Source: provided

சென்னை:அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூ, சில நாட்களுக்கு முன்பு நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை கருத்துகள் பேசியதை அடுத்து, அ வருக்கு நடிகை த்ரிஷா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

 சேலம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக இருந்த ஏ.வி.ராஜூ,  அண்மையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.  இதனையடுத்து அவர் அளித்த பேட்டியில்,  நடிகை த்ரிஷாவின் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிட்டு அ.தி.மு.க.வை விமர்சித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.  இது சமூக வலைத்தளங்களில் வைரலானது.  இந்த பிரச்னைக்கு திரைப் பிரபலங்கள் பலர் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

இந்த நிலையில், அவருக்கு நடிகை த்ரிஷா வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.  அதில் இந்த விவகாரம் தொடர்பாக,  24 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளார்.  மேலும்,  பிரபலமான youtube பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் மன்னிப்பு கேட்கப்பட்ட வேண்டும் எனவும் கூறியுள்ளார். கடந்த 4 நாட்களாக அவதூறு கருத்தினால் மன உளைச்சலில் ஈடுபட்டுள்ளதாகவும்,  இதற்கு நஷ்ட ஈடு தர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான செய்திகள் எந்தெந்த யூடியூப் சேனல்கள்,  பத்திரிகைகள் மற்றும் சேனல்களில் வந்ததோ அவை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வழக்கறிஞர் நோட்டீஸில் கூறியுள்ளார்.  மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளை மேற்கொள்ளாவிடில் சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் வழக்கறிஞர் நோட்டீஸ் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 9 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 9 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 11 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 11 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 12 months 9 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 12 months 10 hours ago
View all comments

வாசகர் கருத்து