முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் குழு கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட 10 கட்சிகள் பங்கேற்பு

வெள்ளிக்கிழமை, 23 பெப்ரவரி 2024      தமிழகம்
Election

Source: provided

சென்னை:தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் குழு தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட 10 கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியது.

மக்களவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து அரசியல் கட்சிகள்,  மாவட்ட ஆட்சியர்கள்,  காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான குழுவினர் சென்னையில் ஆலோசனை நடத்துகின்றனர்.  அந்த வகையில் நேற்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ராஜீவ் குமார் தலைமையிலான குழு ஆலோசனை நடத்தியது.

பாஜக,  காங்கிரஸ்,  பகுஜன் சமாஜ்,  ஆம் ஆத்மி,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,  இந்திய கம்யூனிஸ்ட்,  தி.மு.க.,  அ.தி.மு.க.,  தேமுதிக,  தேசிய மக்கள் கட்சி ஆகிய 10 கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.  அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் இருந்து பரிந்துரைகள்,  கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பெற்றுக்கொண்டார்.

அதே போல் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் பேட்டியளித்த தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,  “தேர்தல் ஆணையத்தின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தோம். கடந்த தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கும் இருக்கும் வித்தியாசம் என்னவென்றால், வாக்குப்பதிவு இயந்திரத்திற்கும், மைய கட்டுப்பாட்டிற்கும் இடையில் விவிபேட் வைக்க வேண்டும் என்ற புதிய நிலை கொண்டு வந்துள்ளனர்.  இது சட்டத்திற்கு புறம்பானது. இடையில் விவிபேட் வைத்தால் 100% சதவிகிதம் துள்ளியமாக காட்டாது. அது மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தும்.

இதுபோன்ற வழிமுறை கையாண்டால் தவறுகள் நடக்க வாய்ப்பிருப்பதாக தேர்தல் ஆணையமே ஒப்புக்கொண்டுள்ளனர்.  தேர்தல் தொடர்பாக புகார் மனு அளித்தால்,  அதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்க மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். எத்தனை கட்டமாக தேர்தல் நடத்தினாலும் சந்திக்க தயாராக உள்ளோம்” என்று தெரிவித்தார்.

அதேபோல் காங்கிரஸ் மூத்த தலைவர் சந்திரமோகன் அளித்த பேட்டியில் கூறியதாவது :  “தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும்.  நீண்ட நாட்கள் இடைவெளி விட்டு நடத்தினால் மக்களுக்கு சந்தேகம் எழும்.  எனவே அதை தவிர்க்க வேண்டும்.  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில்,  வாக்குப்பதிவில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். வாக்களிக்க வரக்கூடிய மக்களுக்கு போதுமான வசதிகள் வாக்குச்சாவடி மையத்தில் இருக்க வேண்டும். அடையாள அட்டை இருந்தால் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்”. இவ்வாறு சந்திரமோகன் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய குழு உறுப்பினர் பி.சம்பத்,  கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  “ஒரே நாளில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். பல நாட்களாக நடத்தக் கூடாது என்று வலியுறுத்தினோம்.  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் தேர்தல் நடத்தப்படுவதால் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுகிறது.  இதனால் பொதுமக்களுக்கு சந்தேகம் வலுவாக உள்ளது.  வாக்களித்த பின் அதன் ரசீது வழங்கப்பட வேண்டும். நடுநிலையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.  தேர்தலில் பணப்பட்டுவாடாவை கண்காணிக்க வேண்டும்.  மதுரையில் நடைபெற்றதைப் போல தவறுகள் நடைபெறக் கூடாது” என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து