எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : சிங்காரச் சென்னையை, சீர்மிகு சென்னையாக உருவாக்கியதில் தி.மு.க.விற்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலி பகுதியில் ரூ. 2,465 மதிப்பில் நாள்தோறும் 750 மில்லியன் லிட்டர் குடிநீர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இந்த கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் திறப்பு விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் துறைமுருகன், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு, பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
பின்னர் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது., “அரசு பொறுப்பேற்று முதன்முதலில் கவனித்த துறை மட்டுமல்ல, வளர்த்த துறை இந்தத் துறை அதோடு என்னுடைய இதயத்திற்கு நெருக்கமான கடல் நீரை குடிநீராக்கக்கூடிய திட்ட தொடக்க விழாவில் கலந்து கொள்வதில் கூடுதல் மகிழ்ச்சியடைகிறேன். இந்தத் திட்டத்தோடு சேர்த்து ரூ. 2,465 கோடி மதிப்பிலான 96 முடிவுற்ற திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. மேலும், 1,802 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 39 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டிருக்கிறது.
நகர்ப்புற மக்களுடைய அவசியத் தேவைகளான கல்வி,மருத்துவம், குடிநீர், சாலைகள் போன்றவற்றை முறையாக சரியாக நம்முடைய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மிக மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நீர் இன்றி அமையாது உலகு. இதைவிட குடிநீரின் தேவையை யாராலும் விளக்கி சொல்லிவிட முடியாது. அதனால்தான் கடுமையான நிதி நெருக்கடி காலத்திலும், ரூ.100 கோடி மதிப்பிலான குடிநீர்த் திட்டங்களை நாம் தீட்டி வழங்கி வருகிறோம்.
2006-2011 தி.மு.க. ஆட்சியில் நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தேன். மீஞ்சூரில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைக்க 2007-ஆம் ஆண்டு நான்தான் அடிக்கல் நாட்டினேன். அதற்கு பிறகு 2010-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி அதை திறந்து வைத்தார்கள்.இந்த நிலையத்திலிருந்து கிடைக்கின்ற குடிநீர் மூலம், வடசென்னையில் சுமார் 10 லட்சம் மக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.
இதை தொடர்ந்து நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு 2010-ஆம் ஆண்டு நான்தான் அடிக்கல் நாட்டினேன். இந்த நிலையத்தின் மூலமாக தென்சென்னையில் வசிக்கின்ற சுமார் 9 லட்சம் மக்கள் பயன்பெற்று வருகிறார்கள். அதனால்தான், பேரூரில், இது மாதிரியான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த நிலையம், தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய நிலையமாக அமைய இருக்கிறது. இந்த நிலையத்தை அமைக்கின்ற பணிகள் நிர்ணயிக்கப்பட்ட கால அளவுக்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு நிச்சயமாக, உறுதியாக கொண்டு வரப்படும்.
சிங்காரச் சென்னையை, சீர்மிகு சென்னையாக உருவாக்கியதில் தி.மு.க.விற்கு பெரிய பங்கு இருக்கிறது. சென்னை மாநகராட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயராக இரண்டு முறை இருந்தவன் நான். அப்போது சென்னையின் வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்களைத் தீட்டி வழங்கி இருக்கிறோம். இன்றைக்கு சென்னையை நீங்கள் சுற்றி வரும்போது பார்க்கின்ற மேம்பாலங்கள் உள்ளிட்ட பல கட்டமைப்புகள் தி.மு.க. ஆட்சிக்காலத்தில்தான் உருவாக்கப்பட்டது. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 2 weeks ago |
-
தி.மு.க. - பா.ஜ.க. இடையே மறைமுக கூட்டணி: த.வெ.க. பகீர் குற்றச்சாட்டு
17 Mar 2025சென்னை : தி.மு.க. , பா.ஜ.க. இடையே மறைமுக கூட்டணி உள்ளதாக த.வெ.க. குற்றஞ்சாட்டியுள்ளது.
-
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான அ.தி.மு.க.வின் நம்பிக்கையில்லா தீர்மானம் சட்டசபையில் தோல்வி : தீர்மானத்துக்கு 63 பேர் ஆதரவு - 154 பேர் எதிர்ப்பு
17 Mar 2025சென்னை : தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு மீது அ.தி.மு.க. கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மற்றும் டிவிஷன் முறையில் தோல்வி அடைந்தது.
-
ஐ.பி.எல்.அணி கேப்டன்கள் கூட்டம்: பி.சி.சி.ஐ. ஏற்பாடு
17 Mar 2025மும்பை : ஐ.பி.எல். தொடரில் பங்கேற்க உள்ள அனைத்து அணிகளின் கேப்டன்களுடன் கூட்டம் நடத்த பி.சி.சி.ஐ. ஏற்பாடு செய்துள்ளது.
-
மும்பை வீரருக்கு நோட்டீஸ்
17 Mar 202518-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 22-ம் தேதி தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த கிரிக்கெட் தொடர் மே மாதம் 25-ம் தேதி வரை நடைபெறுகிறது.
-
லக்னோ அணியில் ஷர்துல் தாகூர்?
17 Mar 2025லக்னோ, மார்ச் 18-
-
எங்களை யாராலும் பிரிக்க முடியாது: செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு இ.பி.எஸ். பதில்
17 Mar 2025சென்னை : நாங்கள் ஒற்றுமையாக தான் இருக்கிறோம்.
-
உள்கட்சி பிரச்னைகளை திசைதிருப்ப சபாநாயகர் மீது அ.தி.மு.க. தீர்மானம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
17 Mar 2025சென்னை : உள்கட்சிப் பிரச்னைகளைத் திசைதிருப்பவே பேரவைத் தலைவர் மீது அ.தி.மு.க. தீர்மானம் கொண்டுவந்துள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
‘தமிழர் நிதி நிர்வாகம்: தொன்மையும் தொடர்ச்சியும்’ ஆவண நூலை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் : சிறப்பு இணைய தளத்தையும் தொடங்கி வைத்தார்
17 Mar 2025சென்னை : தமிழக அரசின் நிதித்துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ‘தமிழர் நிதி நிர்வாகம்: தொன்மையும் தொடர்ச்சியும்’ ஆவண நூலினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு, இதற்க
-
மும்பைக்கு எதிரான போட்டியில் எம்.எஸ்.டோனி 8-வது டவுன்: சி.எஸ்.கே. நிர்வாகம் தகவல்
17 Mar 2025சென்னை : மார்ச் 23-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் - சி.எஸ்.கே. அணிகள் மோதுகின்றன.
-
டில்லி கேபிடல்ஸ் அணியின் துணை கேப்டனாக பிளெஸ்ஸிஸ் நியமனம்
17 Mar 2025புதுடில்லி : டில்லி கேபிடல்ஸ் அணியின் துணைக் கேப்டனாக முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் டு பிளெஸ்ஸிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
சென்னை - மும்பை போட்டிக்கான டிக்கெட் மார்ச் 19-ம் தேதி துவக்கம்
17 Mar 2025சென்னை : ஐ.பி.எல். 2025 தொடரின் சென்னை - மும்பை அணிகளுக்கான போட்டி மார்ச் 23-ல் சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-03-2025.
18 Mar 2025 -
ஐ.பி.எல். அணி கேப்டன்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
17 Mar 2025மும்பை : 18-வது ஐ.பி.எல். தொடரில் அணி கேப்டன்கள் பெறப்போகும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
-
மாஸ்டர்ஸ் லீக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ. 1 கோடி பரிசு
17 Mar 2025ராய்ப்பூர் : மாஸ்டர்ஸ் கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ. 1 கோடி பரிசு வழங்கப்பட்டது.
மாஸ்டர்ஸ் லீக்...
-
எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாட்டு மீனவர்கள் 3 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
18 Mar 2025ராமேஸ்வரம்: எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
-
உ.பி. மகா கும்பமேளாவின்போது நாட்டின் பிரம்மாண்டத்தை கண்டு உலகம் வியந்தது பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு
18 Mar 2025புது தில்லி: மகா கும்பமேளாவை வெற்றியடைச் செய்த பக்தர்கள் உள்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்து, மக்களவையில் தனது உரையைத் தொடங்கினார் பிரதமர் நரேந்திர மோடி.
-
தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படாமல் தடுக்க வலுவான தூதரக முயற்சிகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Mar 2025சென்னை: தமிழ்நாட்டு மீனவர்கள் மேலும் கைது செய்யப்படாமல் தடுக்கவும், இலங்கை சிறைக் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 110 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் ப
-
ஒரு சவரன் தங்கம் விலை மீண்டும் 66 ஆயிரம் ரூபாய்
18 Mar 2025சென்னை: தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது சாமானிய மக்களை அதிகம் பாதித்துள்ள நிலையில், தங்கம் விலை மீண்டும் ரூ.66 ஆயிரத்தை தொட்டுள்ளது.
-
பிரேமலதா விஜயகாந்துக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து
18 Mar 2025சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பிரேமலதா விஜயகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.;
-
மலையேற்ற வீரர்களால் ரூ.63.43 லட்சம் வருவாய் முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்
18 Mar 2025சென்னை: தமிழகத்தில் மலையேற்ற வீரர்களால் ரூ. 63.43 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 2-வது நாள் விவாதம் துவக்கம்
18 Mar 2025சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 2வது நாள் விவாதம் நேற்று தொடங்கி நடைபெற்றது.
-
சிம்பொனி வேலியண்ட்டை வழங்கி மீண்டும் வரலாறு படைத்த இசைஞானி இளையராஜா வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி புகழாரம்
18 Mar 2025டெல்லி: இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
-
தொகுதி மறுசீரமைப்பில் அநீதி: திருச்சி சிவா எம்.பி. பேச்சு
18 Mar 2025புதுடெல்லி: தொகுதி மறுசீரமைப்பில் எங்களுக்கு அநீதி இழைக்கப்படும் சூழல் உள்ளது என்று திருச்சி சிவா எம்.பி. கூறினார்..
-
நெல்லை ஓட்டலில் ரூ.1 லட்சம் திருடிய ஊழியருக்கு 2 ஆண்டு சிறை
18 Mar 2025நெல்லை: நெல்லை தாழையூத்து அருகே ஓட்டலில் திருடிய ஊழியருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சாதி, மத மோதலை தூண்டும் புகைப்படங்கள்: தூத்துக்குடி, நெல்லை எஸ்.பி.க்கள் எச்சரிக்கை
18 Mar 2025தூத்துக்குடி: சாதி, மத ரீதியான மோதலை தூண்டும் வகையில் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடக்கூடாது என தூத்துக்குடி, நெல்லை மாவட்ட எஸ்.பி.க்கள் எச்சரித்துள்ளனர்.