எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் கட்சி மாறி வாக்கு ஊகங்களால், சமாஜ்வாதி கட்சியின் கொறடா மனோஜ் குமார் பாண்டே நேற்று (செவ்வாய்) காலை தனது கொறடா பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் ரேபரேலி மாவட்டத்தின் உஞ்சகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராவார்.
முன்னதாக, மாநிலத்தின் போக்குவரத்துத் துறை அமைச்சர் தயாசங்கர் சிங்கை மனோஜ் குமார் சந்திக்கச் சென்றார். அப்போது அவர் கூறுகையில்,
கொறடா பதவியிலிருந்து விலகும் எனது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொள்ளும் படி கட்சித் (சமாஜ்வாதி கட்சி) தலைமையிடம் கேட்டுள்ளேன் என்று கூறினார்.
மனோஜ் குமாரின் சந்திப்புக்கு பின்னர் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் தயாசங்கர் சிங், பிரதமர் மோடியின் கொள்கைகளால் நாட்டில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகளால் ஈர்க்கப்பட்ட பலர் பா.ஜ.க.வில் இணைந்து கொண்டிருக்கின்றனர்.
மனோஜ் பாண்டே எப்போதுமே சனாதனத்தின் ஆதரவாளராக இருந்துள்ளார். இது குறித்த சட்டப்பேரவைக்கு உள்ளேயும் வெளியேயும் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதனால் அவர் அங்கு மகிழ்ச்சி இல்லாமலே இருந்தார். ராமரை தரிசிக்க அழைப்பு வந்த போது அனைவரும் ராமரை தரிசிக்கச் செல்ல வேண்டும் என்று அவர் விரும்பினார் என்று தெரிவித்தார்.
முன்னதாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று கூறுகையில், எங்கள் கட்சியின் 3 உறுப்பினர்களும் வெற்றி பெறுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இந்தத் தேர்தலில் வெற்றி பெற பா.ஜ.க. அனைத்து யுக்திகளையும் கையாளுகிறது. வெற்றிக்குத் தேவையான அனைத்தையும் பா.ஜ.க. செய்யும். சொந்த லாபத்தை விரும்பும் எங்கள் கட்சித் தலைவர்கள் சிலர் பா.ஜ.க.வுக்குச் செல்லலாம் என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


