முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாரிஸ் ஒலிம்பிக் தலைமை பொறுப்பிலிருந்து விலகுவதாக மேரி கோம் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2024      விளையாட்டு
Mary-Kom 2023 06 30

Source: provided

மும்பை : ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் இந்திய வீரர்களை வழிநடத்தும் தலைமை பொறுப்பிலிருந்து விலகுவதாக குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் அறிவித்துள்ளார். 

குத்துச்சண்டை... 

இந்தியாவின் சாதனை வீராங்கனையாக திகழ்பவர் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம்.  இவர் ஆறு முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்தவர். மேலும், 2 012 ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடிக்கொடுத்தவர்.  சமீபத்தில் வயதின் காரணமாக குத்துச்சண்டை போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

எல்லா வழிகளிலும்...

இந்நிலையில்,  பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய வீரர்களுக்கான தலைவர் பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்குமாறு இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி. உஷாவிற்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “எனது நாட்டிற்கு சாத்தியமான எல்லா வழிகளிலும் சேவை செய்வதை நான் ஒரு கௌரவமாக கருதுகிறேன்.  அதற்காக நான் மனதளவில் தயாராக இருந்தேன்.  இருப்பினும், நான் மதிப்புமிக்க பொறுப்பை நிலைநிறுத்த முடியாமல் போனதற்கு வருந்துகிறேன்.  மேலும் தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்ய விரும்புகிறேன்.  ஒரு அர்ப்பணிப்பிலிருந்து பின்வாங்குவது சங்கடமாக இருக்கிறது.  ஆனால் எனக்கு வேறு வழியில்லை.  எனது நாட்டையும்,  இந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களையும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உற்சாகப்படுத்த நான் எப்பொழுதும் இருக்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தனிப்பட்ட காரணம்... 

இதுகுறித்து பி.டி. உஷா கூறுகையில், “ஒலிம்பிக் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரரும், IOA தடகள ஆணையத்தின் தலைவருமான மேரி கோம் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகியது எங்களுக்கு வருத்தமளிக்கிறது.  அவரது முடிவையும்,  அவரது தனியுரிமையையும் நாங்கள் மதிக்கிறோம்.  தகுந்த ஆலோசனைக்கு பிறகு மேரி கோமுக்கு பதிலாக பதவி வகிப்பவர் குறித்து அறிவிக்கப்படும்” என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து