எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
டெஹ்ரான் : இஸ்ரேல் நாட்டின் நெவாதிம் விமான தளத்தின் மீது 5 பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள் தாக்கியதில், சி-130 என்ற ராணுவ போக்குவரத்து விமானம் ஒன்று, ஓடுபாதை மற்றும் கிடங்குகள் ஆகியவை தாக்கி அழிக்கப்பட்டன.
சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கசில் அமைந்த ஈரான் நாட்டின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில், ஈரானின் இஸ்லாமிய புரட்சி படையை சேர்ந்த 3 முக்கிய அதிகாரிகள் மரணமடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என சூளுரைத்தது. 2 வாரங்களாக அந்த பகுதியில் பதற்ற நிலை நீடித்தது.
இந்நிலையில், இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை ஈரான் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட நடுத்தர ரக பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளையும், 30-க்கும் கூடுதலான தரைவழி தாக்குதல் நடத்த கூடிய ஏவுகணைகள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை கொண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில், இஸ்ரேலுடன் தொடர்புடைய சரக்கு கப்பலை ஈரான் படையினர் சிறை பிடித்துள்ளனர்.
இந்நிலையில், இஸ்ரேலின் 2 விமான தளங்களை ஈரான் ஏவுகணைகள் தாக்கியுள்ளன என செய்தி தெரிவிக்கின்றது. இஸ்ரேல் நாட்டின் நெவாதிம் விமான தளத்தின் மீது 5 பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள் தாக்கியதில், சி-130 என்ற ராணுவ போக்குவரத்து விமானம் ஒன்று, ஓடுபாதை மற்றும் கிடங்குகள் ஆகியவை தாக்கி அழிக்கப்பட்டன.
இதேபோன்று, இஸ்ரேலில் நெகவ் பாலைவன பகுதியில் உள்ள விமான தளத்தின் மீது 4 ஏவுகணைகள் தாக்குதல் நடத்தின. எனினும், இதில் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என ஏ.பி.சி. நியூஸ் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. இஸ்ரேல் மீது 7 ஹைப்பர்சோனிக் ரக ஏவுகணைகள் ஏவப்பட்டன. அவை இடைமறித்து அழிக்கப்படவில்லை என ஈரான் தெரிவித்தது.
எனினும், 79 ஆளில்லா விமானங்கள் மற்றும் 3 ஹைப்பர்சோனிக் ரக ஏவுகணைகள் ஆகியவற்றை அமெரிக்க ராணுவம் தாக்கி அழித்தது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பதிலடியை இஸ்ரேல் பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரியும் உறுதிப்படுத்தி உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


