எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தமிழையும், தமிழரையும் உண்மையாக நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. ஆட்சியின் திட்டங்களை பட்டியலிட்டு, வேட்பாளர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது,
ஏப்ரல் 19-ம் தேதி நம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகிற நாள், நாட்டின் எதிர்காலம் உங்கள் கையில்தான் இருக்கிறது. உங்கள் வாக்கு கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவை நாசமாக்கிய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இந்தியாவில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா, வேண்டாமா? என்பதை முடிவு செய்யும் தேர்தல் இது. அரசியல் சட்டத்தை காப்பாற்ற நடக்கின்ற தேர்தல். சாதி, மதம் கடந்து மக்களை ஒற்றுமையாக வாழ உங்கள் வாக்குதான் வலிமையான ஆயுதம்.
நாட்டை காக்க, நாளைய தலைமுறையை காக்க இண்டியா கூட்டணி சின்னங்களுக்கு வாக்களிக்க வேண்டும். தமிழகத்தை வஞ்சித்த பா.ஜ.க.வையும், தமிழகத்தை பாழ்படுத்திய அ.தி.மு.க.வையும் ஒருசேர வீழ்த்த வேண்டும்.
தமிழகத்திற்கு சிறப்பு திட்டங்கள் கிடைக்க, தமிழையும், தமிழரையும் உண்மையாக நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும். தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் உற்ற துணையாக இருக்கும், உங்கள் திராவிட அரசின் சாதனைகள் இந்தியா முழுக்க எதிரொலிக்க இண்டியா கூட்டணிக்கு ஆதரவு தாருங்கள் என இருகரம் கூப்பி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த வீடியோவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


