முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இம்பேக்ட் வீரர்: கோலி கருத்து

சனிக்கிழமை, 18 மே 2024      விளையாட்டு
Virat-Kohli 2023 08 11

Source: provided

ஐ.பி.எல். தொடரில் பி.சி.சி.ஐ. கடந்த வருடம் அறிமுகப்படுத்திய இம்பேக்ட் வீரர் விதிமுறை முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அந்த விதிமுறையால் ஒவ்வொரு அணியும் எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேனுடன் விளையாடுகிறது. எனவே இம்பேக்ட் விதிமுறை ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் போன்ற ஆல்ரவுண்டர்கள் உருவாவதை தடுப்பதாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா சமீபத்தில் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். 

இந்நிலையில் அதை ஏற்றுக்கொள்ளும் விராட் கோலி இந்த விதிமுறையை பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா மாற்றியமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "ரோகித் சர்மா கூறுவது சரிதான். அவரது கருத்தை நான் ஒப்புக்கொள்கிறேன். விளையாட்டில் பொழுதுபோக்கு என்பது ஒரு அம்சமாகும். இந்த விதிமுறையால் பவுலர்கள் ஒவ்வொரு பந்திலும் நாம் பவுண்டரி அல்லது சிக்சர் கொடுப்போம் என்று நினைத்துக்கொண்டே பந்து வீசுகின்றனர். இது போன்ற ஒன்றை நான் அனுபவித்ததில்லை. நாம் உயர்மட்ட கிரிக்கெட்டை விளையாடுகிறோம் என்றார்.

__________________________________________________

பஞ்சாப் அணிக்கு புதிய கேப்டன் 

நடப்பு ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியானது 13 போட்டிகளில் விளையாடி 5-ல் மட்டுமே வெற்றி பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து 9-வது இடத்தில் உள்ளது. இதனையடுத்து பஞ்சாப், தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கான பஞ்சாப் அணியின் புதிய கேப்டனாக ஜித்தேஷ் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். 

முன்னதாக இந்த சீசனுக்கான பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஷிகர் தவான் காயத்தால் விலகிய நிலையில், சாம் கர்ரண் கேப்டனாக செயல்பட்டார். தற்போது அவரும் டி20 உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு தாயகம் திரும்பி விட்டார். இந்நிலையில் நடப்பு சீசனில் பஞ்சாப் அணியின் கடைசி போட்டிக்கான கேப்டனாக ஜித்தேஷ் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

__________________________________________________

பார்முக்கு திரும்பிய ரோகித்

 டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக ரோகித் சர்மா ஃபார்முக்குத் திரும்பியுள்ளது இந்திய அணிக்கு வலுசேர்க்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரோகித் சர்மாவிடமிருந்து சிறப்பான ஆட்டத்தை பார்ப்பதற்கு நன்றாக உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற முடியாது. இருப்பினும், உலகக் கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாள்களே இருக்க, ரோகித்தின் சிறப்பான ஆட்டம் மகிழ்ச்சியளிக்கிறது. 

இந்திய அணிக்கு தேவைப்படுவதும் இதுபோன்ற ஆட்டமே. டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தால், பின்வரிசை ஆட்டக்காரர்கள் ஆட்டத்தை சிறப்பாக முடித்துக் கொடுப்பார்கள். தொடக்கம் சிறப்பாக அமைந்தால் இந்திய அணியால் 200 ரன்களுக்கும் அதிகமாக ஸ்கோர் செய்ய இயலும் என்றார். டி20 உலகக் கோப்பையில் வருகிற ஜூன் 5 ஆம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியில் இந்திய அணி அயர்லாந்தை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

__________________________________________________

மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்

நடப்பு ஐ.பி.எல். தொடரில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 7 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. 3ஆண்டுகளுக்குப் பிறகு பிளே ஆஃப் சுற்றுக்கும் தேர்வாகியுள்ளது. ஐ.பி.எல். தொடரில் மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியினர். இதற்கு முக்கிய காரணம் கேப்டன் கம்மின்ஸ். 

ஐதராபாத் அணிக்கு கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிலும் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றார். மேலும் ஆஷஸ் தொடரினையும் தக்க வைத்துக்கொண்டார். தற்போது ஐ.பி.எல். தொடரில் முதல்முறையாக கேப்டன்சி பொறுப்பேற்று அசத்தி வருகிறார். தமிழக வீரர் நடராஜன், மூத்த பௌலர் உனத்கட் ஆகியோர் கம்மின்ஸின் கேப்டன்சியை புகழ்ந்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து