முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் இடுக்கி உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்: வானிலை மையம்

ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2024      இந்தியா
India-Meteorological 2022

Source: provided

திருவனந்தபுரம் : கேரளாவில் இடுக்கி உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு இன்று  சிவப்பு எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது. 

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய கூடும். பத்தனம்திட்டா, கோட்டயம் மற்றும் இடுக்கி ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடப்படுகிறது. இது தவிர, திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா மற்றும் எர்ணாகுளம் ஆகிய பகுதிகளுக்கு 2 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

கனமழையால், வெள்ளம் ஏற்படுவதுடன் நகர பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்க கூடும். தொடர் கனமழையால் நிலச்சரிவும் ஏற்பட கூடும்.  வருகிற 23-ம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யும். நாளை 21-ம் தேதி மிக கனமழை பெய்ய கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

மேலும் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கேரளா மற்றும் மாஹியில் வரும் 22-ம் தேதியன்றும், தெற்கு உள்கர்நாடக பகுதிகளில்  இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்ய கூடும். தமிழகம் மற்றும் கேரளாவில் நாளை 21-ம் தேதி வரையில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய கூடும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து