முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகத்தில் துணை நடிகை கொலை: தலைமறைவான கணவருக்கு வலைவீச்சு

செவ்வாய்க்கிழமை, 21 மே 2024      இந்தியா
Vidya 2024-05-21

மைசூரு, கர்நாடகத்தில் துணை நடிகை கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாகியுள்ள வித்யாவின் கணவர் நந்தீஷை போலீசார் தேடி வருகின்றனர்.

கர்நாடகா மாநிலம், மைசூர் ஸ்ரீராம்பூரை சேர்ந்தவர் நடிகை வித்யா. பல படங்களில் வித்யா துணை நடிகையாக நடித்து வந்தவர். இவர் மைசூருவில் பன்னூர் துர்கானூர் பகுதியில் கணவர் நந்தீஷ் மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். நடிகையாக மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியின் மைசூரு நகர செயலாளராக நடிகை வித்யா செயல்பட்டு வந்தார். இதன் காரணமாக அவருக்கும், அவரது கணவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு அவர்கள் இருவருக்கும் மீண்டும் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், துர்கானூரில் உள்ள அவரது வீட்டில் வித்யா தலையில் கூரிய ஆயுதத்தால் குத்திக்கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது உடலை போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக வித்யாவின் கணவரை தொடர்பு கொள்ள முயன்ற போது அவரை பற்றிய தகவல் எதுவும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இதனால் வித்யாவை அவரது கணவர் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர். இக்கொலை தொடர்பாக மைசூரு மாவட்டம் பன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன் தலைமறைவாகியுள்ள நந்தீஷை போலீசார் தேடி வருகின்றனர். மைசூரில் காங்கிரஸ் பிரமுகரான நடிகை வித்யா கொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து