முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ. 50,000 கோடியில் 26 ரபேல் விமானங்களை வாங்கும் இந்தியா : பேச்சு நடத்த பிரான்ஸ் குழு இன்று வருகை

புதன்கிழமை, 29 மே 2024      இந்தியா
Rafale 2024-05-29

Source: provided

புதுடெல்லி : ரூ.50,000 கோடியில் 26 ரபேல் விமானங்களை இந்தியா கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளதால், இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த பிரான்ஸ் குழு இன்று இந்தியா வருகிறது. 

இந்தியா – பிரான்ஸ் இடையிலான ரபேல் போர் விமானம் தொடர்பான மற்றொரு ஒப்பந்தத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான 26 ரபேல் போர் விமானங்கள் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை இரு நாடுகளும் தொடங்க உள்ளன. 

இதற்காக இன்று பிரான்ஸ் நாட்டின் உயர்மட்ட குழு இந்தியா வரவுள்ளது. அந்த குழுவினர் இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். பிரான்ஸ் குழுவில், விமான தயாரிப்பு நிறுவனங்கள், பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் தொழில்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

இந்தியா தரப்பில், பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் மற்றும் கடற்படை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும்பட்சத்தில், இந்த நிதியாண்டின் இறுதிக்குள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. 

முன்னதாக இந்திய கடற்படையின் விமானம் தாங்கி கப்பல்களான ஐ.என்.எஸ். விக்ராந்த் மற்றும் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா ஆகியவற்றிற்கு 26 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான இந்தியாவின் டெண்டருக்கு, பிரான்ஸ் நாடு கடந்த டிசம்பர் மாதம் தனது அனுமதியை வழங்கியது. 

இந்த ஒப்பந்தம் இரு நாட்டு அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் என்பதால், இந்திய மற்றும் பிரான்ஸ் அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து