Idhayam Matrimony

சினிமாவை விட அரசியல் வாழ்க்கை கடினமானது: நடிகை கங்கனா ரனாவத் பேட்டி

வியாழக்கிழமை, 13 ஜூன் 2024      இந்தியா
Kangana-ranaut-2024-06-13

புது டெல்லி, சினிமாவை விட அரசியல் வாழ்க்கை மிகவும் கடினமானது என பா.ஜ.க. எம்.பி. கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், பாராளுமன்ற மக்களவை தேர்தலில் இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

இந்த நிலையில், சினிமாவை விட அரசியல் வாழ்க்கை மிகவும் கடினமானது என பா.ஜ.க. எம்.பி. கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது,

எனது தாத்தா சர்ஜு சிங் ரனாவத் எம்.எல்.ஏ.வாக இருந்தவர். எனவே அரசியல் வாய்ப்புகள் என் குடும்பத்தில் இருந்து எப்போதும் வெகு தொலைவில் இருந்ததில்லை. என்னுடைய முதல் படமான கேங்க்ஸ்டர் படத்திற்குப் பிறகே எனக்கு அரசியல் வாய்ப்புகள் வரத் தொடங்கின. 

எனது தந்தைக்கும், சகோதரிக்கும் கூட அரசியலில் நுழைவதற்கான வாய்ப்புகள் வந்திருக்கின்றன. அரசியலில் சேர என்னை அணுகியது இது முதல் முறையல்ல. எனக்கு இதில் ஆர்வம் இல்லையென்றால், நான் இவ்வளவு சிரமப்பட வேண்டியது இல்லை. 

இது ஒரு கடினமான வாழ்க்கை, சினிமாவைப் போன்றது அல்ல. ஒரு திரைப்பட நடிகராக படப்பிடிப்புகளுக்கும், திரையரங்குகளுக்கும் சென்று நிம்மதியான வாழ்க்கையை வாழலாம். நடிகர்களின் வாழ்க்கை மென்மையானது. 

இதன் காரணமாகவே அரசியல் வாழ்க்கையை புரிந்து கொள்ள எனக்கு நீண்ட காலம் பிடித்தது. இந்த வாழ்க்கை மிகவும் கடினமானது. மருத்துவர்களைப் போலவே, பிரச்சினைகள் உள்ளவர்கள் மட்டுமே அரசியல்வாதிகளைப் பார்க்க வருவார்கள். 

படம் பார்க்கப் போகும்போது நிம்மதியான மனநிலையுடன் செல்லலாம். ஆனால் அரசியல் அப்படிப்பட்டது அல்ல. பிடித்ததை செய்பவர்கள் புத்திசாலிகள் என்றும், தேவையானதை செய்பவர்கள் மேதைகள் என்றும் எனது குரு ஜக்கி வாசுதேவ் கூறியிருக்கிறார். இவ்வாறு கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து