முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமை: கே. பாலகிருஷ்ணன்

திங்கட்கிழமை, 17 ஜூன் 2024      தமிழகம்
balakrishnan-2024-06-17

சென்னை, சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

நெல்லையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

தமிழகத்தில் ஆணவக் கொலைகள் அதிகம் நடக்கின்றன. கட்சி அலுவலகத்தில் பட்டப்பகலில் தாக்குதல் நடக்கும் அளவுக்கு பாதுகாப்பில்லாத சூழல் உள்ளது. 

யாரையும் கடத்திச் சென்று திருமணம் செய்து வைக்கவில்லை. நாடி வருவோரை பாதுகாக்கிறோம். காதலை பெற்றோரே ஏற்றுக் கொண்டாலும், சில சாதி அமைப்புகள் தான் இதை ஊதி பெரிதாக்குகின்றன. தூண்டும் சாதி அமைப்புகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி மறுப்பு திருமணம் செய்வோருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேடயமாக இருக்கும். சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை. இவ்வாறு அவர் கூறினார்.

நெல்லையில் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது ஒரு கும்பல் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக, சாதி மறுப்பு திருமணம் செய்த பெண்ணின் தாய், தந்தை உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து