முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய பேரிடராக வயநாடு நிலச்சரிவு: சட்ட அம்சங்கள் ஆராயப்படும் என மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 4 ஆகஸ்ட் 2024      இந்தியா
Suresh-Gopi 2024 08 04

Source: provided

திருவனந்தபுரம் : வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிப்பது தொடர்பான சட்ட அம்சங்கள் ஆராயப்படும் என்று மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த பெருமழை காரணமாக கடந்த ஜூலை 30-ம் தேதி சூரல்மலை, முண்டக்கை பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையும் ராணுவமும் தொடர்ந்து நேற்று 6-வது நாளாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் நேற்று வயநாடு நிலச்சரிவு பகுதியை மத்திய இணை அமைச்சரும், நடிகருமான சுரேஷ் கோபி பார்வையிட்டார்.  முண்டக்கையின் பூஞ்சிரிமட்டம் பகுதிக்கு வந்த அமைச்சர் சுரேஷ் கோபி அங்கு நடைபெறும் மீட்பு, தேடுதல் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.  

முன்னதாக, அமைச்சர் சுரேஷ் கோபி கேரள பொதுப்பணி மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் பி.ஏ. முகமது ரியாஸிடம் ஆலோசனை நடத்தியிருந்தார். அது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் சுரேஷ் கோபி, 

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டுமென்றால் அதற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய சட்ட அம்சங்கள் ஆராயப்பட வேண்டும். அதற்காக மத்திய அரசு வயநாடு நிலச்சரிவு நிலவரத்தை ஆராய்ந்து வருகிறது. 

தற்போதைய சூழலில் உயிருடன் மீட்கப்பட்டவர்களின் புனர்வாழ்வுக்கும், அவர்களின் மனநிலையை மேம்படுத்துவதற்குமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மீட்புப் பணிகளில் கூடுதல் படைகள் தேவைப்பட்டால் அதுபற்றி கேரள அரசு மத்திய அரசுக்கு முறைப்படி கோரிக்கை விடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். 

இந்த நிலையில் கேரள முதல்வர் பினராய் விஜயன் நேற்று கேரள போலீஸ் அகாடமியில் பயிற்சி முடித்தோருக்கான விழாவில் பங்கேற்ற போது, வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும். ஒரு ஒட்டுமொத்த கிராமமுமே நிலச்சரிவில் அழிந்தது கேரள மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மீட்புப்பணியில் கடமையைவிட மனிதம் மிஞ்சி நிற்கிறது. வயநாடு நிலச்சரிவு மீட்புப் பணியில் காவல்துறை சிறப்பாக பங்களிப்பை செலுத்தி வருகிறது. தங்கள் உயிரைவிட பாதிக்கப்பட்டோர் நலனே முக்கியம் என காவல் துறையினர் களப்பணியாற்றி வருகின்றனர். அது கேரள காவல்துறையின் துணிச்சலுக்கு சான்று என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து