முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகுகிறேன்: கமல்ஹாசன்

செவ்வாய்க்கிழமை, 6 ஆகஸ்ட் 2024      சினிமா
Kamal 2024-01-12

சென்னை, நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

உலகளவில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி, இந்திய மொழிகளிலும் நடைபெற்று வருகிறது. தமிழில் பிரபல தொலைக்காட்சியில் 2016-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். வெறும் பொழுதுபோக்கு அம்சத்திற்காக இல்லாமல் பல சினிமா அனுபவங்களையும் புத்தகங்களையும் தொடர்ந்து அறிமுகப்படுத்தினார்.

இந்த நிலையில், தொகுப்பாளராக கடந்த 7 ஆண்டுகளாக பொறுப்பு வகித்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

கனத்த மனதுடன் இதை அறிவிக்கிறேன். 7 ஆண்டுகால பயணத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து சிறிய ஓய்வை எடுக்கிறேன். என் அடுத்தடுத்த திரைப்பட பணிகளால் இந்த முடிவை எடுத்துள்ளேன்.  

நீங்கள் கொடுத்த அன்பும் ஆதரவும் இந்தியளவில் முக்கியமான ரியாலிட்டி நிகழ்ச்சியாக இது மாறியது. அடுத்த பிக்பாஸ் சீசனும் பெரிய வெற்றியைப் பெறும். உங்கள் அனைவருக்கும் போட்டியில் பங்கேற்றவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவிக்கிறேன்  எனக் குறிப்பிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து