எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் அருகே நடிகர் ஜீவா சென்ற கார் சாலையோர தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்தப்பினார்.
தமிழ் திரைப்பட நடிகர் ஜீவா மற்றும் அவரது மனைவியுடன் கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சின்னசேலம் அருகே அவர் கார் வந்த திசையில் சாலையை கடப்பதற்காக இருசக்கர வாகனம் ஒன்று குறுக்கே வந்தது. இதனால், இருசக்கர வாகனம் மீது மோதிவிடக் கூடாது என்பதற்காக ஜீவா காரை திருப்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவில் இருந்த தடுப்பின் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் காரின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக நடிகர் ஜீவா மற்றும் அவரது மனைவியும் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும், பரபரப்பும் ஏற்பட்டது. இதையடுத்து மாற்று கார் மூலமாக நடிகர் ஜீவா மற்றும் அவரது மனைவி சேலத்திற்கு சென்றனர். இந்த விபத்து தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்த சின்னசேலம் போலீசார் விபத்தில் சிக்கிய காரை பறிமுதல் செய்து, விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


