முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2023 உலகக் கோப்பை தொடர்: பி.சி.சி.ஐ.க்கு ரூ.11,637 கோடி வருமானம்

புதன்கிழமை, 11 செப்டம்பர் 2024      விளையாட்டு
BCCI 2023 06 13

Source: provided

மும்பை : 2023 உலகக் கோப்பை தொடரில் பி.சி.சி.ஐ.க்கு கிடைத்த வருமாம் ரூ. 11,637 கோடி என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

சக்திவாய்ந்த... 

உலகின் பணக்கார மற்றும் சக்திவாய்ந்த கிரிக்கெட் வாரியமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் (பிசிசிஐ) உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் சக்திவாய்ந்த அணியாகவும் இந்தியா விளங்குகிறது. இந்தியாவில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் ஐ.சி.சி. தொடர்களில் இருந்து அதிகளவு வருவாய் ஈட்டப்படுகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் ஐ.சி.சி. அறிக்கையின் படி 2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இருந்து பி.சி.சி.ஐ.க்கு ரூ. 11 ஆயிரத்து 637 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரியது...

ஐ.சி.சி. சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் அறிக்கையின்படி, இதுவரை நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடர்களை விட கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் மிகப்பெரியது என தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5-ம் தேதி துவங்கி நவம்பர் 19-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தொடரின் போட்டிகள் அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, தரமசாலா, ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை மற்றும் பூனே என நாட்டின் பத்து நகரங்களில் நடைபெற்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து