எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஏமன் : பிரிட்டன் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்திய ஹவுதிக்களால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
பாலஸ்தீனத்தை தொடர்ந்து லெபனானிலும் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலை எதிர்த்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து லெபனானில் ஹிஸ்புல்லாவினரை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஏமனை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களும் இஸ்ரேல் மற்றும் மேற்கு நாடுகளுக்கு எதிரான தாக்குதலை முன்னெடுத்துள்ளனர்.
செங்கடல் வழியாக வரும் கப்பல்களைத் தாக்குவோம் என்று ஹவுதிக்கள் தரப்பில் இருந்து கப்பல் நிறுவனங்களுக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த நிலையில் செங்கடலில் வந்த பிரிட்டன் எணணெய் கப்பல் மீது இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தாக்குதலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தியுள்ளனர்.
கார்டெலியா மூன் எனப்படும் பிரிட்டிஷ் எண்ணெய் டேங்கர் கப்பல் மீது வெடிபொருள் நிரப்பப்பட்ட ட்ரோன் படகை மோதவைத்து ஹவுதிக்கள் வெடிக்கச்செய்துள்ளனர். ஏமனில் ஹவுதிக்கள் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுக நகரமான ஹூதைதா வில் இருந்து 110 கிலோமீட்டர் தூரத்தில் நடந்த இந்த தாக்குதல் நடந்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


