முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காலாண்டு தேர்வு மதிப்பெண்களை வரும் 15-ம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவேற்ற பள்ளி கல்வித்துறை உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 8 அக்டோபர் 2024      தமிழகம்
School-Education 2022 02 11

Source: provided

சென்னை : பள்ளி மாணவர்களின் காலாண்டு தேர்வு மதிப்பெண்களை எமிஸ் வலைதளத்தில் வரும் 15-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ச.கண்ணப்பன் மற்றும் தொடக்கக் கல்வித் துறை இயக்குநர்  நரேஷ் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் நேற்று அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, 

தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டுக்கான காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வில் 6 தல் 8-ம் வகுப்பு மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை எமிஸ் வலைதளத்தில் ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும். விடைத்தாள்களை திருத்திய பின்னர் தொகுத்தறி மதிப்பெண்களை (100 மதிப்பெண்) வரும் 15-ம் தேதிக்குள் பதிவு செய்வது அவசியமாகும்.இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

இந்த தகவலை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்துவித ஆசிரியர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். இதுசார்ந்து அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்க அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து