எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உதவிப்பொறியாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 246 பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்வு வாயிலாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஆகிய துறைகளில் உதவிப் பொறியாளர் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 246 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 20 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்வு வாயிலாக பல்வேறு துறைகளில் உதவிப் பொறியாளர் பணியிடத்திற்கான தேர்விற்கு 13.10.2023 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டு, தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தேர்வுகள் நடத்தப்பட்டது.
அதன்படி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் 96 பேரும், பொதுப்பணித் துறையில் 42 பேரும், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையில் 52 பேரும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையில் 18 பேரும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் 38 பேரும் என மொத்தம் 246 நபர்கள் உதவிப் பொறியாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 20 பேருக்கு முதல்வர் நேற்று பணி நியமன ஆணைகளை வழங்கி, வாழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என். நேரு, பொன்முடி, எ.வ.வேலு, செந்தில்பாலாஜி, தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –16-01-2026
16 Jan 2026


