எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை, மீண்டும் முதல்வர் பதவியை நான் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ள மகாராஷ்டிரா மாநில காபந்து முதல்வராக இருக்கும் சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிரா முதல்வர் குறித்து பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முடிவே இறுதியானது என்றும் அவர் எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர முதல்வர் பதவி யாருக்கு என்பது தொடர்பாக இழுபறி நீடித்து வரும் நிலையில், முன்னாள் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சட்டமன்ற தேர்தலில் மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்ட நிலையில், அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி நீடித்துக்கொண்டிருந்தது. இந்த நிலையில்தான், ஏக்நாத் ஷிண்டே தாணேவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அவரது உரையாடல் முழுவதும் வீடியோவாகவும் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த உரையில், மகாயுதி கூட்டணிக்கு மக்கள் அளித்த பேராதரவுக்கு மிக்க நன்றி. முதல்வர் யார் என்பது குறித்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முடிவே இறுதியானது என்று தெரிவித்துள்ளார். ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்து மக்களுக்காக இதுவரை நான் செய்த பணிகள் திருப்தி அளிக்கின்றன. மீண்டும் முதல்வர் பதவியை நான் விரும்பவில்லை. மகாயுதி கூட்டணி சார்பில், அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்வோம் என்று ஏக்நாத் கூறியுள்ளார். தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கும் சிரித்தபடி பல்வேறு பதில்களை அளித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


