எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை: ஏக்நாத் ஷிண்டே எந்த இலாக்காவும் கேட்கவில்லை என்றும், வரும் 16-ம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்றும் மகராஷ்டிர மாநில முதல்வர் பட்னாவிஸ் தெரிவித்தார்.
மகராஷ்டிராவின் முதல்வராக பா.ஜ.க. வின் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று முன்தினம் பதவியேற்றார். சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.
இந்த நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு முதல்வர் பட்னாவில் அளித்த பேட்டியில்,
பா.ஜ.க. வை சேர்ந்தவர் தான் முதல்வர் என்பதை முதல் சந்திப்பிலேயே ஏக்நாத் ஷிண்டே ஏற்றுக் கொண்டார். சிவசேனா கட்சி தலைவர்கள் சிலர் தங்கள் கட்சியில் இருந்து முதல்வர் வர வேண்டும் என விரும்பினர்.
நாங்கள் பா.ஜ.க. வை சேர்ந்தவர் தான் முதல்வர் என்பதில் திட்டவட்டமாக இருந்தோம். தனிப்பட்ட முறையில் ஷிண்டேவுடன் எனக்கு நல்லுறவு உள்ளது. ஏக்நாத் ஷிண்டே எந்த இலாக்காவும் கேட்கவில்லை. வரும் 16-ம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும்.
உள்துறை எப்பொழுதும் பா.ஜ.க.வசம் தான் இருக்கும். கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் நாங்கள் ஒருமித்த கருத்தை எட்டி உள்ளோம். பிரிவினைவாத அரசியலை மக்கள் நிராகரித்தனர்.
இலவச மின்சாரம், கல்வி போன்ற நல்ல திட்டங்களால் மகராஷ்டிராவில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைந்தது. இது தான் பா.ஜ.க. மிகப்பெரிய கட்சியாக உருவானதற்கு காரணம். முழு மனதுடன் மக்கள் என்னை ஏற்றுக் கொண்டனர். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


