எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் போதையில் தனது வாகனத்தை அதி வேகமாக ஓட்டி 2 மாணவர்கள் கொல்லப்பட்ட வழக்கில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமந்தீப் சிங் (வயது 36) என்ற நபர் மது மற்றும் கொக்கெய்ன் பயன்படுத்திய போதையுடன் நியூயார்க்கின் வடக்கு ப்ராட்வே சாலையில் தவறான பாதையில் தனது காரை அதி வேகமாக ஓட்டியுள்ளார். மணிக்கு வெறும் 40 கி.மீ வேகத்தில் செல்ல வேண்டும் என்ற கட்டுபாடுகள் உள்ள சாலையில் அவர் 95 கி.மீ வேகத்தில் வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, எதிரே வந்த வாகனத்தின் மீது மோதியதில் அதில் பயணித்த 14 வயது மாணவர்களான ஈதன் ஃபாகோவிட்ஸ் மற்றும் ட்ரூ ஹாசென்பெயின் ஆகியோர் சம்பவயிடத்திலேயே பலியானதுடன் மேலும், 2 பேர் படுகாயமடைந்தார்கள்.
இதனைத் தொடர்ந்து, அங்கிருந்து தப்பியோடி ஒளிந்துக்கொண்ட அமந்தீப் சிங்கை அந்நாட்டு காவல் துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். அப்போது, அவர் அளவுக்கு அதிகமான போதையில் இருந்ததுடன் தான் அந்நாட்டின் நியூஜெர்சியில் இருப்பதாக கருதி தனது காரை அவர் ஓட்டி வந்துள்ளார் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது தான் இந்த குற்றத்தை செய்யவில்லை என தொடர்ந்து மறுத்து வந்த அமந்தீப் சிங் கடந்த ஜனவரி மாதத்தின் துவக்கத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் மினேயோலாவிலுள்ள நசாவு கவுண்டி நீதிமன்றம் அவருக்கு 81/3 முதல் 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. முன்னதாக, திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான அம்ந்தீப் சிங் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச் செல்வது போலீஸார் அணிந்திருந்த கேமராவில் பதிவாகியிருந்தது இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக கருதப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


