முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வனங்களில் சாலை அமைக்க முதல்வர் உத்தரவு: அமைச்சர் பொன்முடி தகவல்

வியாழக்கிழமை, 20 மார்ச் 2025      தமிழகம்
ponmudi 2023-07-06

Source: provided

சென்னை: வனங்களில் சாலை அமைக்க தேவையான பணிகளை மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 4வது நாள் விவாதம் நடந்தது. சட்டசபை உறுப்பினர்களின் தொகுதி சார்ந்த கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்தனர்.

இந்நிலையில் கேள்வி நேரத்தின் போது, ஒகேனக்கல் - பென்னாகரம் - தருமபுரி - திருப்பத்தூர் வரை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தப்படுமா என்று பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் எ.வ.வேலு, "வனத்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் தடையில்லா சான்று பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் தடையில்லா சான்று பெற்றதும் சாலை விரிவாக்க பணிகள் நடைபெறும்" என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய வனத்துறை அமைச்சர் பொன்முடி, "அவசியம் என்றால் வனங்களில் சாலை அமைக்க தேவையான பணிகளை மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும், துறைகளுடன் இணைந்து பேசி இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்" என்றும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து