எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் நேற்று தொடங்கியது. கடந்த 2008-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தொடர் 18-வது ஆண்டாக வீறுநடை போடுகிறது. இந்த நிலையில் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நேற்று (சனிக்கிழமை) தொடங்கி மே 25-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. முன்னதாக, கொல்கத்தா அணி வீரர்களை நேரில் சந்தித்து நடிகரும் , கொல்கத்தா அணியின் உரிமையாளருமான ஷாருக்கான் வாழ்த்து தெரிவித்தார் . இது தொடர்பான விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .
______________________________________________________________________________________________________
பாகிஸ்தான் உலக சாதனை
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி நேற்று முன்தினம்நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 19.5 ஓவர்களில் 204 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. இதனையடுத்து 205 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 16 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 207 ரன் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெறும் 16 ஓவர்களில் 205 ரன்களை சேசிங் செய்து அசத்தியது. இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 200+ ரன்களை அதிவேகமாக சேசிங் செய்த அணி என்ற மாபெரும் உலக சாதனையை பாகிஸ்தான் படைத்துள்ளது. இதற்கும் முன்னர் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தென் ஆப்பிரிக்க அணி 17.4 ஓவர்களில் 206 ரன்களை சேசிங் செய்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அதனை முறியடித்துள்ள பாகிஸ்தான் புதிய உலக சாதனை படைத்துள்ளது.
______________________________________________________________________________________________________
அர்ஜென்டினாவிடம் உருகுவே தோல்வி
2026-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் தென்அமெரிக்க அணிகளுக்கான தகுதி சுற்றில் இந்திய நேரப்படி இன்று நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜென்டினா - உருகுவே அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய அர்ஜென்டினா ஆட்ட நேர முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அர்ஜென்டினா அணியில் தியாகோ அல்மடா கோல் அடித்து வெற்றிக்கு வித்திட்டார். இந்த பிரிவில் அர்ஜென்டினா அணி இதுவரை 13 ஆட்டங்களில் ஆடி 9 வெற்றி, 3 தோல்வியுடன் 28 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
______________________________________________________________________________________________________
சென்னை போட்டி குறித்து ஹர்பஜன்
ஐ.பி.எல். 2025 டி20 கிரிக்கெட் திருவிழா நேற்று தொடங்கியது. இன்று ஞாயிற்றுக்கிழமை 2 போட்டிகள் நடைபெறுகின்றன. இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்காக இரண்டு அணிகளும் தயாராகி வருகின்றன. நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களும், மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களும் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சென்னை - மும்பை போட்டியானது ஐ.பி.எல்.-இல் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை போன்றது என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஹர்பஜன் சிங், "சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐ.பி.எல்.-இல் சிறந்த அணிகளில் ஒன்றாகும். சென்னை அணியை தோற்கடிக்கும் அணி தலைப்புச் செய்திகளில் இடம்பெறும். மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் அது பொருந்தும். ஒவ்வொரு ஐ.பி.எல். சீசனிலும் பல இளம் வீரர்கள் வருகிறார்கள். ரன்கள் அடிக்கிறார்கள், விக்கெட்டுகளை எடுக்கிறார்கள். ஆனால் என்னுடைய பார்வை எல்லாம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ரியான் பராக் மேல் தான் உள்ளது. அவரிடம் அற்புதமான திறமை உள்ளது" என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தமிழக சட்டசபை இன்று கூடுகிறது
19 Jan 2026சென்னை, பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்ட சபை இன்று கூடுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி.
-
வரும் 22-ம் தேதி அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது
19 Jan 2026சென்னை, மத்திய அமைச்சரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பா.ஜ.க. பொறுப்பாளருமான பியூஸ் கோயல் நாளை (புதன்கிழமை) சென்னைக்கு வருகை தரவுள்ளார்.
-
தொடர்ந்து 4-வது ஆண்டாக சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் சரிவு
19 Jan 2026பெய்ஜிங், சீனாவில் தொடர்ந்து 4-வது ஆண்டாக குழந்தைகள் பிறப்பு விகிதம் சரிவை கண்டுள்ளது. இது தொடர்பாக அரசு அறிவித்த பல்வேறு திட்டங்கள் பலனற்று போயின.
-
டெல்லியில் லேசான நிலநடுக்கம்
19 Jan 2026புதுடெல்லி, டெல்லியில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
-
நெம்மேலியில் ரூ.342.6 கோடியில் புதிதாக அமைகிறது நீர்த்தேக்கம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
19 Jan 2026செங்கல்பட்டு, 1.6 டி.எம்.சி.
-
லடாக்கில் நிலநடுக்கம்
19 Jan 2026புதுடெல்லி, லே லடாக் பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
-
குடியரசு தினவிழா அணிவகுப்பு ஒத்திகை: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம்
19 Jan 2026சென்னை, குடியரசு தினவிழாவை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெறுகிறது.
-
பா.ஜ. புதிய தேசிய தலைவரை தேர்வு செய்ய இன்று தேர்தல்
19 Jan 2026புதுடெல்லி, பா.ஜ. புதிய தேசிய தலைவரை தேர்வு செய்ய இன்று தேர்தல் நடக்கிறது. இன்றே புதிய தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகிறது.
-
பா.ம.க. எங்களுக்கே சொந்தம்: ஐகோர்ட்டில் ராமதாஸ் வழக்கு
19 Jan 2026சென்னை, பா.ம.க. கட்சி விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
-
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றம்: 71 புதிய மாவட்ட தலைவர்கள் நியமனம்
19 Jan 2026சென்னை, தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்பு ரீதியான 71 மாவட்டங்களுக்கு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
செர்பியா நாட்டில் ஊழலுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணி
19 Jan 2026நோவி சாத், செர்பியா அரசில் ஊழலுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணி நடத்தினர்.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
19 Jan 2026சென்னை, சென்னையில் வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை காலை வணிகம் தொடங்கியதும், ஆபரணத் தங்கம் விலை மற்றும் வெள்ளி விலைகள் உயர்ந்து விற்பனையானது.
-
பனையூரில் இன்று நடைபெறுகிறது 12 பேர் அடங்கிய த.வெ.க.வின் தேர்தல் அறிக்கை குழு கூட்டம்
19 Jan 2026சென்னை, பனையூரில் இன்று நடைபெறுகிறது த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு கூட்டம்.
-
இ.பி.எஸ்.சுடன் தனியரசு சந்திப்பு?
19 Jan 2026சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு சந்தித்து பேசினார்.
-
காஸா தொடர்பான அமைதி வாரியம்: இந்தியாவுக்கு ட்ரம்ப் அழைப்பு
19 Jan 2026நியூயார்க், காஸாவில் மறுசீரமைப்புக்காகவும் அமைதியை நிலைநாட்டவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அமைதி வாரியத்தில் சேர இந்தியாவுக்கு அமெரிக்
-
அமெரிக்காவின் நலனுக்கு எது தேவையோ அதை செய்வேன்: அதிபர் டெனால்ட் ட்ரம்ப் அதிரடி முடிவு
19 Jan 2026நியூயார்க், இனி அமைதியைப் பற்றி மட்டுமே சிந்திக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவின் நலனுக்கு எது தேவையோ அதைச் செய்வதில் கவனம் செலுத
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: விஜய்யிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் அடுக்கடுக்கான தொடர் கேள்வி: விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய திட்டம்
19 Jan 2026புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் 2-வது முறையாக நேரில் ஆஜரான த.வெ.க. தலைவர் விஜய்யிடம் தாமதமாக வர காரணம் என்ன? உள்ளிட்ட அடுக்கடுக்கான தொடர் கேள்விகளை சி.பி.ஐ.
-
தமிழகத்தில் விடைபெற்ற வடகிழக்கு பருவமழை இயல்பை விட 3 சதவீதம் குறைவு
19 Jan 2026சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விடைபெற்ற நிலையல் கடந்த ஆண்டை விட 3 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம்: கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின்
19 Jan 2026சென்னை, செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு, கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றுவரும் கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம் கட்டுமானப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில
-
பாகிஸ்தானில் பயங்கரம்: வணிக வளாக திடீர் தீ விபத்தில் 14 பேர் பலி
19 Jan 2026கராச்சி, பாகிஸ்தானில் நாட்டில் வணிக வளாக ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 14 பேர் பலியான சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30 வரை அவகாசம் நீட்டிப்பு
19 Jan 2026சென்னை, தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான காலஅவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
திபெத்தில் நிலநடுக்கம்
19 Jan 2026பெய்ஜிங், திபெத்தில் ரிக்டர் 4 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நெம்மேலியில் புதிதாக அமையவுள்ள 'மாமல்லன்' ஏரி மூலம் 13 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்க முடியும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
19 Jan 2026மாமல்லபுரம், 69 ஏரிகளில் இருந்து வரும் உபரிநீரை சேமித்து மாமல்லபுரம் அருகே நெம்மேலியில் புதிதாக அமையவுள்ள மாமல்லன் ஏரி மூலம் 13 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்க முடியும
-
அவதூறு வழக்கில் கோர்ட்டில் நேரில் ஆஜராகாத ராகுல் காந்தி விசாரணை ஒத்திவைப்பு
19 Jan 2026லக்னோ, பா.ஜ.க. நிர்வாகி தொடர்ந்த வழக்கில் ராகுல் காந்தி கோர்ட்டில் ஆஜராகததால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
-
ஸ்பெயின் ரயில் விபத்தில் உயிரிழப்பு 21 ஆக உயர்வு
19 Jan 2026மாட்ரிட், ஸ்பெயின் நாட்டில் நடந்த ரயில் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.


