எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : 100 நாள் வேலை திட்டத்தில், தமிழ்நாட்டிற்கான ரூ. 4,034 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி பேசியதாவது:- தமிழ்நாட்டில், 76 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 91 லட்சம் தொழிலாளர்கள், மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதித் திட்டப் பணிகளில் தீவிரமாகப் பங்கேற்கின்றனர். இதில் 86 சதவீத வேலைவாய்ப்பு பெண் தொழிலாளர்களுக்கும், கிட்டத்தட்ட 29 சதவீத தொழிலாளர்கள் எஸ்சி/எஸ்டி குடும்பங்களுக்கும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 லட்சம் மாற்றுத்திறனாளி தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.
மத்திய அரசு நிதியை வழங்காததால், தமிழ்நாட்டில் இந்த திட்டத்தில் வேலைகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய ரூ. 2,985 கோடி சம்பளத்தொகை கடந்த 4.5 மாதங்களாக (24 மார்ச் 2025 நிலவரப்படி) நிலுவையாக உள்ளது. மேலும், 24 மார்ச் 2025 நிலவரப்படி, ரூ.1,048 கோடி மதிப்புள்ள பொருள் செலவினப் பாக்கிகளைச் சேர்த்துக் கொண்டால், தமிழ்நாட்டிற்கு நிலுவையில் உள்ள மொத்த நிதி ரூ.4,034 கோடியாக இருக்கும்.
இதுதொடர்பாக, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், நிலுவையில் உள்ள ஊதியத் தொகைகளை உடனடியாக வழங்குமாறு ஏற்கனவே 13.01.2025 அன்று பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால், இதுவரை அந்த தொகை விடுவிக்கப்படவில்லை. எனவே, மத்திய அரசு, தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ/4,034 கோடி நிலுவைத் தொகையை விரைவாக விடுவிக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


