எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருப்பதி : பவன் கல்யாண் மீது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ரோஜா பாய்ச்சல்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சொந்தமான கோசாலையில் 100-க்கும் மேற்பட்ட பசுக்கள் இறந்து விட்டதாக முன்னாள் திருப்பதி தேவஸ்தான ஆங்காவல குழு தலைவர் பூமண கருணாகர ரெட்டி குற்றம்சாட்டி இருந்தார். அவரது குற்றச்சாட்டுக்கு திருப்பதி தேவஸ்தானம் மறுப்பு தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் கோசாலையில் பசுக்கள் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் நேற்றுமுன்தினம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து முன்னாள் அமைச்சர் ரோஜா கூறியதாவது:-
எங்காவது ஏதாவது நடந்தால் அதை வெளிப்படையாக பேசி சனாதான தர்மத்தை பாதுகாப்பதாக துணை முதல் அமைச்சர் பவன் கல்யாண் பேசுகிறார். திருப்பதியில் அநியாயங்கள், தவறான செயல்கள் நடக்கும் போது ஏன் அவர் வாய் திறக்கவில்லை. பவன் கல்யாண் திசை திருப்பும் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். தவறு செய்தவர்கள் ஏன் தண்டிக்கப்படவில்லை.
இதுதான் பவனின் நேர்மையா? பதவியும், சலுகையும் கொடுத்தால் அவர் வாயை மூடிக் கொண்டு இருப்பாரா?. கோசாலையில் பசுக்கள் ஏன் இறந்து விடுகிறது என தெளிவுபடுத்த வேண்டும். ஏழுமலையானுக்கு துரோகம் செய்தால் என்ன நடக்கும் என சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாணுக்கு தெரியும். அவர்கள் அதை அனுபவித்து இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


