எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : ஜனாதிபதிக்கு தனிப்பட்ட அதிகாரம் எதுவும் இல்லை என ஜெகதீப் தன்கருக்கு கபில் சிபல் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் 2-வது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காததால், அவற்றுக்கு அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவை பயன்படுத்தி சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல் அளித்தது.அத்துடன் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் கவர்னர் மற்றும் ஜனாதிபதிக்கு காலக்கெடு நிர்ணயித்தனர்.
ஆனால் ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அறிவுறுத்தல் வழங்கியதை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கடுமையாக சாடியுள்ளார். மாநிலங்களவை பயிற்சியில் பங்கேற்றவர்கள் மத்தியில் பேசும்போது அவர் கூறியதாவது:-சட்டம் இயற்றும், நிர்வாக நடைமுறையை செயல்படுத்தும், சூப்பர் நாடாளுமன்றமாக செயல்படும் நீதிபதிகள் நம்மிடம் இருக்கிறார்கள். அரசியல் சட்டப்பிரிவு 142, ஜனநாயக சக்திகளுக்கு எதிரான ஒரு அணு ஏவுகணையாக மாறி இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டின் சமீபத்திய தீர்ப்பில் ஜனாதிபதிக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது. நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்? நாட்டில் என்ன நடக்கிறது? அரசியலமைப்பின் கீழ் உங்களுக்கு உள்ள ஒரே உரிமை, பிரிவு 145(3)-ன் கீழ் அரசியலமைப்பை விளக்குவது மட்டுமே. ஆனால் நீதித்துறையால் நிர்வாகம் நடத்தப்படுமானால், நீங்கள் எப்படி கேள்விகள் கேட்பீர்கள்? தேர்தல்களில் யாரை நீங்கள் பொறுப்பேற்க வைப்பீர்கள்? இவ்வாறு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஆவேசமாக பேசினார்.
இந்த நிலையில், துணை ஜனாதிபதி கருத்துக்கு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கண்டனம் தெரிவித்துள்ளார். அப்போது கபில் சிபல் கூறியதாவது: ஜனாதிபதி என்பவர் பெயரளவில் மட்டுமே தலைவர். அவருக்கு தனிப்பட்ட அதிகாரங்கள் எதுவும் இல்லை. ராஜ்யசபா தலைவர் அரசியல் கருத்துக்களை பேசுவதை இதற்கு முன் நான் பார்த்தது இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


