Idhayam Matrimony

4-வது நாளாக போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல்: பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் சாடல்

திங்கட்கிழமை, 28 ஏப்ரல் 2025      இந்தியா
India-Border 2023-06-08

ஜம்மு, ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் குப்வாரா மாவட்டங்களில் தொடர்ந்து 4-வது நாளாக போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின்பு இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வருகிறது. இந்தநிலையில் தொடந்து 4-வது நாள் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளது.

பாகிஸ்தான் ராணுவம் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே உள்ள பல்வேறு இடங்களில் ஏப்.24 வியாழக்கிழமை இரவு துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதேபோல், 25-26 மற்றும் 27-28 ஆகிய இரவுகளிலும் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல்களுக்கு ஒவ்வொரு முறையும் சரியான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு எல்லை தாண்டிய பயங்கரவாதம் காரணமாக இருக்கலாம் என்று இந்தியா கருதும் நிலையில், ஏப்.23-ம் தேதி பல்வேறு எதிர்நடவடிக்கைகளில் ஈடுபட்டது. அதில் 1960-ம் ஆண்டு சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு, அட்டாரி எல்லை வழி மூடல், பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் வெளியேற்றம் போன்றவையும் அடங்கும். அதேபோல், அட்டாரி எல்லை வழியாக இந்தியாவுக்குள் வந்த பாகிஸ்தானியர்கள் மே 1-ம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தானும் எதிர்நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. ஏப்.24-ம் தேதி அந்நாடு இந்திய விமானங்களுக்கு தனது வான் எல்லையை மூடுவதாகவும், மூன்றாம் உலக நாடுகள் வழியாக நடக்கும் வர்த்தகம் உட்பட இந்தியாவுடனான வர்த்தகத்தை நிறுத்துவதாகவும் அறிவித்தது.

மேலும் சிந்து நதி நீர் ஒப்பந்த நிறுத்தத்தை நிராகரித்துள்ள பாகிஸ்தான், ஒப்பந்தத்தின் படி தனது நாட்டுக்கு சொந்தமான பங்கினை நிறுத்திவைக்கும் எந்த ஒரு செயலும் போர் நடவடிக்கையாக பார்க்கப்படும்.” என்று தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து