முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடு, வீடாக சென்று பிரசாரம் ஏன்? அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 1 ஜூலை 2025      தமிழகம்      அரசியல்
Duraimurugan 2022 12 11

சென்னை, டிரெண்ட் மாறியதால் ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரசாரம் மூலம் மக்களை வீடு, வீடாக சென்று சந்திக்க உள்ளோம் என்று அமைச்சர் துரைமுருகன் கூறி உள்ளார்.

தி.மு.க., சார்பில் ஓரணியில் தமிழ்நாடு என்ற 45 நாள் பிரசாரத்தை அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் நேற்று (ஜூலை 1) சென்னையில் தொடங்கி வைத்தார். அதற்கான வீடியோவை அவர் வெளியிட்டார்.

தொலைக்காட்சி வழியாக வேலூரில் இருந்தபடி பிரசாரம் தொடக்க விழாவை அமைச்சர் துரைமுருகன் பார்த்தார். பின்னர், பிரசாரத்தை தொடங்கி வைத்த அவர், நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது;  ஓரணியில் தமிழ்நாடு என்ற புதிய சித்தாந்தத்தை முதல்வர் அறிவித்து இருக்கிறார்.  முதலில், பிரிந்திருக்கின்ற அல்லது ஒத்த கருத்துடையவர்கள் யார், யார் இருக்கிறார்களோ அவர்களை எல்லாம் சந்தித்து கொள்கை விளக்கங்களை தெரிவித்து இந்த அணியிலே சேர்க்க வேண்டும் என்பது இந்த தத்துவத்தின் முதல் பாகம்.

ஒவ்வொரு குடும்பத்திலும் பிரசாரங்கள் இன்று மாறி போயிருக்கிறது. கொஞ்ச காலம் முன்பு ஒரு பொதுக்கூட்டத்தை 3 மணி நேரம் ரசிப்பார்கள். ஆனால் இன்றைக்கு அந்த மாதிரி டிரெண்ட் கிடையாது. எதையும் டி.வி.யில் பார்த்துவிட்டு போய்விடலாம் என்ற நிலை இருக்கிறது.  

 நேரிடையாக அந்தந்த குடும்பங்களை சந்தித்து, இந்த ஆட்சியின் நிலைமை, இந்த ஆட்சி 4 ஆண்டுகாலங்களில் என்னென்ன செய்திருக்கிறது என்பதை எடுத்துச் சொல்லி, எங்களின் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்பதற்காக அல்லது வருகிற தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக என்னென்ன வழிமுறைகளை எல்லாம் மாற்றுக் கட்சியினர் ஆதரிக்கின்றனர் என்பதை தனித்தனியாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

இவ்வாறு துரைமுருகன் பேசினார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து