முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கை விரல் ரேகை பதியாதவர்களின் ரேஷன் கார்டுகள் செல்லாதா..? தமிழக அரசு விளக்கம்

வெள்ளிக்கிழமை, 4 ஜூலை 2025      தமிழகம்
TN 2023-04-06

சென்னை, வரும் ஜூன் 30-ம் தேதிக்குள்  கை விரல் ரேகை பதியாதவர்களின் ரேஷன் கார்டுகள் செல்லாது என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் வாட்ஸ்அப் உள்ளிட்ட ஊடகங்களில் தகவல் ஒன்று பரவி வருகிறது. அதில் "தஞ்சாவூர் மக்களே ஜூன் 30-ந்தேதிக்குள் ரேஷன் கார்டுடன் ஆதார், மொபைல் எண், கைரேகை, இறந்தவர் பெயர் நீக்கம் போன்றவற்றை அப்டேட் செய்யாவிட்டால் ரேஷன் கார்டு செல்லாது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இது உண்மையா? பொய்யா? என்று தெரியாமல் தஞ்சாவூர் மக்கள் குழப்பம் அடைந்துள்ள நிலையில், இதுகுறித்து தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் அதற்கு விளக்கம் அளித்துள்ளது. அதில், "இது தவறான தகவலாகும். ஏ.ஏ.ஒய். மற்றும் பி.எச்.எச். குடும்ப அட்டைதாரர்கள் கட்டாயமாக அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கை விரல் ரேகையை பதிவு செய்வது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதற்கான கடைசி தேதி வரையறுக்கப்படவில்லை. சமூக ஊடகத்தின் மூலம் வரப்பெற்ற செய்தியில் உண்மை ஏதுமில்லை என்று தஞ்சாவூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தெரிவித்துள்ளார். தவறான தகவலைப் பரப்பாதீர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து