எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.520 உயா்ந்து ரூ.73,120-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில் இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதோடு உலக நாடுகளின் வர்த்தக ரீதியான செயல்பாடும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன்படி, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.
இந்நிலையில், தொடர்ந்து மூன்று நாட்களாக தங்கம் விலை ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த வியாழக்கிழமை அன்று பவுனுக்கு ரூ.160 என தங்கம் விலை உயர்ந்தது. நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.440 என விலை உயர்ந்து விற்பனையானது. இந்தச் சூழலில் சென்னையில் நேற்று (சனிக்கிழமை) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,140-க்கு விற்பனையானது. அதேபோல பவுனுக்கு ரூ.520 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.73,120-க்கு விற்பனையானது. நேற்று முன்தினம் ஒரு பவுன் தங்கம் ரூ.72,600-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
24 காரட் தங்கத்தின் விலையும் நேற்று கிராமுக்கு ரூ.71 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,971-க்கு விற்பனையானது. 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.50 என விலை உயர்ந்து ஒரு கிராம் 7,530-க்கு விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4.90 காசுகளும் நேற்று உயர்ந்து விற்பனையானது. ஒரு கிராம் ரூ.125-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,25,000-க்கும் விற்பனையானது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


