Idhayam Matrimony

எதிரிகளை ஓரணியில் நின்று விரட்டியடிக்க உறுதி ஏற்போம் : தமிழ்நாடு நாளில் துணை முதல்வர் பதிவு

வெள்ளிக்கிழமை, 18 ஜூலை 2025      தமிழகம்
Udhayanidhi 2024-11-25

Source: provided

சென்னை : தமிழ்நாட்டின் பெயரையே மாற்றத் துடிக்கும் ஆதிக்கக் கூட்டத்தின் சதியை, மு.க.ஸ்டாலின் முறியடித்தார் என உதயநிதி தெரிவித்துள்ளார்;

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், 'மெட்ராஸ் மாகாணம்' என்றிருந்த நம்முடைய மாநிலத்திற்கு பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையிலான தி.மு.கழக அரசு 'தமிழ்நாடு' என்று பெயர்ச்சூட்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாள் இன்று. ஒட்டுமொத்த தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கையை - 1967இல் முதன்முதலில் ஆட்சிக்கு வந்த கழக அரசு நிறைவேற்றியத் திருநாள்.

'தமிழ்நாடு' என்று அண்ணா அவர்கள் மும்முறை முழங்க, 'வாழ்க' என்ற உறுப்பினர்களின் வாழ்த்து ஒலியால் சட்டமன்றமே உணர்ச்சிப் பெருக்கால் தத்தளித்தது. தமிழ்த் தாயின் நெஞ்சங் குளிர்ந்திடத்தக்க தீர்மானத்தை நிறைவேற்றி விட்டோம் என்கிற பூரிப்பு எல்லா உறுப்பினர்களின் உள்ளத்திலும்" என்று எழுதினார் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்.

தமிழ்நாட்டின் பெயரையே மாற்றத் துடிக்கும் ஆதிக்கக் கூட்டத்தின் சதியை, அண்ணா - கலைஞர் வழிநின்று முறியடித்தார் நமது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். நம் தலைவர்கள் போராடி மீட்டுத் தந்த தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லிக்கு காவு கொடுக்க கிளம்பியிருக்கும் பாசிசத்தின் பல்லாக்குத் தூக்கிகளை வீழ்த்துவோம். தமிழ்நாட்டின் மண், மொழி, மானத்தை குலைக்க நினைக்கும் எதிரிகளையும், துரோகிகளையும் ஓரணியில் நின்று விரட்டியடிக்க தமிழ்நாடு நாளில் உறுதி ஏற்போம். தமிழ் வெல்க. என தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து