முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செஸ் விளையாடவே பிடிக்கவில்லை: குகேஷிடம் தோற்ற கார்ல்சென் விரக்தி

வெள்ளிக்கிழமை, 4 ஜூலை 2025      விளையாட்டு
Pragnananda 2023-08-25

Source: provided

சாக்ரப் : தற்போதைக்கு தனக்கு செஸ் விளையாடவே பிடிக்கவில்லை என்று உலகின் நம்.1 வீரரான மாக்னஸ் கார்ல்சென் தெரிவித்துள்ளார்.

கார்ல்செனுடன்...

குரேஷியாவில் நடைபெறும் சூப்பர் யுனைடெட் ரேபிட் & பிளிட்ஜ் தொடரின் 6-ஆவது சுற்றில் உலக சாம்பியனும் தமிழக வீரருமான குகேஷ் முன்னாள் உலக சாம்பியனும் உலகின் நம்.1 வீரரான மாக்னஸ் கார்ல்செனும் மோதினார்கள். குகேஷ் கறுப்பு நிற காய்களுடனும் கார்ல்சென் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார்கள். இந்தப் போட்டியில் குகேஷின் 49-ஆவது நகர்த்தலில் கார்ல்சென் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார்.

2 முறை தோல்வி...

சமீபத்தில் நார்வே செஸ் தொடரிலும் கார்ல்செனை குகேஷ் வீழ்த்தினார். இருப்பினும், கார்ல்சென் 7-ஆவது முறையாக நார்வே செஸ் பட்டத்தை வென்றார். அதனால்தான் அவர் உலகின் நம்.1 வீரராக இருக்கிறார்.  தமிழக வீரர் குகேஷை பலமுறை பலவீனமாக வீரர் என்றுகூறிய கார்ல்சென் ஒரே மாதத்திற்குள் 2 முறை தோல்வியுற்றுள்ளார்.

பிடிக்கவில்லை...

போட்டிக்குப் பிறகு கார்ல்சென் கூறியதாவது: தற்போதைக்கு எனக்கு செஸ் விளையாடவே பிடிக்கவில்லை. நான் விளையாடும்போது எனக்கு சரியான மனநிலை அமையவில்லை. நான் தொடர்ச்சியாக தயங்கி தயங்கி விளையாடியதால் தற்போது மோசமான நிலைக்கு உள்ளாகியுள்ளேன். குகேஷ் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்தத் தொடர் மிகவும் நீண்டது. தொடர்ச்சியாக 5 போட்டிகளில் வென்றது பாராட்டத்தக்கது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து