முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூலை 18-ல் பீகார் செல்கிறார் பிரதமர் மோடி

திங்கட்கிழமை, 7 ஜூலை 2025      இந்தியா
Modi 2024-09-15

Source: provided

பாட்னா : பீகாரில் உள்ள மோதிஹரிக்கு ஜூலை 18ல்  பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளதாக அந்த மாநில பா.ஜ.க. தலைவர் திலீப் குமார் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

பீகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நிகழவுள்ள நிலையில், பல்வேறு கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பீகாரில் படையெடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக திலீப் குமார் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜூலை 18ல் பிரதமர் மோடி பீகாரின் மோதிஹரிக்கு வருகை தருவார். இது பிரதமரின் 53வது மாநில வருகையாகும்.

வரவிருக்கும் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக பிரதமர் மோடியின் வருகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பீகாரில் இந்தாண்டு இறுதியில் அக்டோபர்- நவம்பரில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியத் தேர்தல் ஆணையம் இதற்கான தேதியை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

பிரதமர் மோடியின் பீகார் வருகையின்போது சமஸ்திபூரில் ரூ. 17 கோடி மதிப்புள்ள ரயில் திட்டங்களைத் தொடங்கி வைப்பார். மேலும் கற்பூரி கிராம் ரயில் நிலையத்தை மேம்படுத்துவதற்கான அடிக்கல் நாட்டுவார் என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து