முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காரைக்காலில் மாங்கனித் திருவிழா: மாங்கனிகளை வீசி வழிபட்ட பக்தர்கள்

வியாழக்கிழமை, 10 ஜூலை 2025      ஆன்மிகம்
Karaikal-Mango-festival-202

காரைக்கால், காரைக்காலில் நடந்த  திருவிழாவில், பக்தர்கள் மாங்கனிகளை வீசி வழிபாடு நடத்தினர்.

 காரைக்கால் கைலாசநாத சுவாமி, நித்ய கல்யாணப் பெருமாள் கோவில்களில் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட காரைக்கால் அம்மையார் கோவிலில் ஆண்டு தோறும் மாங்கனித் திருவிழா சிறப்பான வகையில் நடத்தப்பட்டு வருகிறது.

நடப்பாண்டுக்கான விழா கடந்த 8-ம் தேதி ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோவிலில் இருந்து மாப்பிள்ளை அழைப்பு வைபவத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் காலை அம்மையார் கோயிலில் புனிதவதியார்- பரமதத்தர் திருக்கல் யாணம், இரவு கைலாசநாதர் கோயிலில் பிச்சாண்டவர் வெள்ளை சாற்றி புறப்பாடு நடைபெற்றது. நேற்று அதிகாலை கைலாசநாதர் கோவிலில் பிச்சாண்டவர், பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனைக் காட்டப்பட்டது.

 தொடர்ந்து பரம தத்தர் காசுக்கடை மண்டபத்துக்கு (கடைத்தெரு பொய்யாதமூர்த்தி விநாயகர் கோவில்) வரும் நிகழ்வு நடைபெற்றது. பின்னர் சிறப்பு மிக்க நிகழ்வான பிச்சாண்டவர் வீதியுலா நடைபெற்றது. இதனையொட்டி சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் கையில் மாங்கனியுடன், கைலாசநாதர் கோவில் வாயிலில் பவழக்கால் சப்பரத்தில் எழுந்தருளினார். பின்னர் காலை 9.30 மணியளவில் கைலாசநாதர் கோவில் வாயிலிருந்து வீதியுலா புறப்பாடு தொடங்கியது.   வீதியுலாவில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கையில் மாங்கனி, பட்டு வஸ்திரம், பூக்கள் உள்ளிட்டவற்றுடன் தொடர்ந்து நீண்ட வரிசையில் நின்று இறைவனை தரிசித்து சென்றனர்.

வீதியுலாவின் போது  சாலைகள், வீடுகள், கடைகள் மற்றும் மாடிப் பகுதிகளில் கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் விதமாக மாங்கனிகளை வீசி இறைத்து இறைவனை வழிபட்டனர். அந்த மாங்கனிகளை இறைவனுக்குப் படைக்கப்பட்ட பிரசாதமாகக் கருதி, ஏராளமான பக்தர்கள் அவற்றை பிடித்து தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.

இதனால் திருமணத் தடை, குழந்தை பேறின்மை போன்ற பல இன்னல்கள் நீங்கி தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.  இவ்விழாவில் புதுச்சேரி அமைச்சர் பி.ஆர்.என்.திருமுருகன், புதுச்சேரி டி.ஐ.ஜி. சத்திய சுந்தரம், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லட்சுமி சவுஜன்யா, நிர்வாக அதிகாரி (கோவில்கள்) கு.அருணகிரி நாதன், கைலாசநாதர் கோவில் நிர்வாக அதிகாரி ஆர்.காளிதாசன், உபயதாரர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை தரிசித்தனர். மாலை காரைக்கால் அம்மையார் கோயிலில் அமுது படையல் நிகழ்வு நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து