முகப்பு

கரூர்

pro karur

கரூரில் தேசிய நெசவாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கைத்தறி கண்காட்சி : கலெக்டர் கு.கோவிந்தராஜ் தொடங்கிவைத்தார்

9.Aug 2017

கரூரில் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு 08.08.2017 இன்று முதல் 10.08.2017 வரை 3 நாட்கள் நடைபெறவுள்ள தேசிய கைத்தறி தின கண்காட்சி மற்றும் ...

Image Unavailable

கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் பெயர் பதிவு செய்யும் பணி கலெக்டர் கு.கோவிந்தராஜ் பள்ளிக்கு சென்று கலந்துரையாடல்

19.Jul 2017

கரூர் மாவட்டம் கரூர் பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கிருஸ்ணராயபுரம்         அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் ...

karur 2017 06 02

கரூர் மாவட்டத்தில் ஆசிரியர் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வு கலெக்டர் கு.கோவிந்தராஜ் ஆய்வு

2.Jul 2017

 கரூர் காந்திகிராமம் புனிததெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் வெண்ணெய்மலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ...

1

கரூர் மாவட்டத்தில் உள்ள 370 திருக்கோவில்களுக்கு பூஜை பொருட்கள்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்

26.Jun 2017

கரூர் அருள்மிகு கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோவிலில் இன்று (25.06.2017)நடைபெற்ற விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ...

karur 2017 06 19

கரூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் : கலெக்டர் கு.கோவிந்தராஜ் வழங்கினார்

19.Jun 2017

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், தலைமையில் ...

Karur 2017 06 18

கரூர் அரசு கலைக்கல்லூரி புதிய வகுப்பறை கட்டடம் ,மண்மங்கலம் அண்ணாநகரில் அங்கன்வாடி புதிய கட்டடம் ஆகிய பணிகளுக்கு பூமி பூஜை : அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

18.Jun 2017

கரூர் மாவட்டம்,தாந்தோணி;யில் உள்ள அரசுக்கலைக் கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டடத்திற்கும், மண்மங்கலம் வட்டம் அண்ணாநகரில் ...

Karur 2017 06 15

கடவூர் வட்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தி இரண்டாம் நாள் நிகழ்ச்சி : கலெக்டர் கு.கோவிந்தராஜ் 481 மனுக்கள் பெற்று நடவடிக்கை

15.Jun 2017

கரூர் மாவட்டத்தில் உள்ள வருவாய் வட்டங்களில் 1426ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) கிராம வாரியாக கணக்கு முடிப்பு ...

Karur 2017 06 11

கரூர் மாவட்டத்தில் 6 இடங்களில் மக்களவை துணை சபாநாயகர் கோரிக்கை மனுக்கள் பெற்றார் : உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு

11.Jun 2017

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புலியூர், உப்பிடமங்கலம், தரகம்பட்டி, பழையஜெயங்கொண்ட சோழபுரம், ...

karur 2017 06 08

கரூர் மாவட்ட விளையாட்டரங்கில் நவீன வசதிகள் ஏற்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் : கலெக்டர் (பொ) சூர்யபிரகாஷ் தலைமையில் நடந்தது

8.Jun 2017

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட விளையாட்டு அரங்கில் விளையாட்டு வீரர்களுக்காக பல்வேறு நவீன வசதிகள் ...

Karur  2017 06 04

கரூரில் 121 நபர்களுக்கு ரூ.3.2 கோடி மதிப்பில் வீட்டுமனைப் பட்டாக்கள் : நாடாளுமன்ற துணை சபாநாயகர், அமைச்சர் வழங்கினர்

4.Jun 2017

கரூர், பசுபதிபாளையம், செல்வாநகரில் வருவாய்த்துறையின் சார்பில் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கும் விழாவில் நாடாளுமன்ற துணை ...

Image Unavailable

கரூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் (பொறுப்பு) சூர்யபிரகாஷ் கோரிக்கை மனுக்களை பெற்றார்

29.May 2017

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) ச.சூர்யபிரகாஷ் ...

Karur 2017 05 26

கரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் : கலெக்டர் (பொ) சூர்யபிரகாஷ் தலைமையில் நடந்தது

26.May 2017

கரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் (பொ) ச.சூர்யபிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ...

Image Unavailable

கரூர் மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வில் 96.29 சதவீதம் தேர்ச்சி

19.May 2017

 கரூர் மாவட்டத்தில், மார்ச் 2017-ல் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 6590 மாணவர்கள், 6417 மாணவிகள் ஆக மொத்தம் 13007 பேர் தேர்வு ...

karur 2017 05 16

கரூர் மாவட்ட சட்டமுறை ஒருங்கிணைந்த தொழிலாளர் அலுவலக வளாகம் : முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்

16.May 2017

தமிழ்நாடு முதலமைச்சர் கரூர் மாவட்டம், காதப்பாறை கிராமத்தில் ரூ.1.95 கோடி மதிப்பிலான சட்டமுறை எடையளவு ஆய்வகத்துடன் கூடிய ...

Image Unavailable

கரூர் மாவட்டத்தில் தடையின்றி பேருந்துகள் இயங்குகிறது கலெக்டர் கோவிந்தராஜ் தகவல்

15.May 2017

கரூர் மாவட்டத்தில் போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்த போராட்டத்தை தொடர்ந்து பேருந்துகள் தடையின்றி இயக்க நடவடிக்கை மேற்கொள்ள ...

karur 2017 05 12

கரூர் மாவட்டத்தில் விடுதிகள் இல்லங்கள் பதிவு செய்தல் குறித்த கண்காணிப்பு குழு ஆலோசனை கூட்டம்

12.May 2017

 வீட்டை விட்டு வெளியே தங்கும் பெண் குழந்தைகள் வளர் இளம் பெண்கள் மற்றும் பெண்கள் ஆகியோர் தங்கும் விடுதிகள் மற்றும் இல்லங்கள ...

karur 2017 05 10

கரூர் மாவட்டத்தில் ஏரி,குளங்களிலிருந்து விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மண் வழங்கும் பணி : கலெக்டர் கோவிந்தராஜ் துவக்கி வைத்தார்

10.May 2017

கரூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை குடிமராமத்து செய்து அதன் மூலம் கிடைக்கப்பெறும் வண்டல்மண், சவுடு, களிமண் போன்றவைகளை வேளாண் ...

Karur 2017 05 07

கரூர் மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மண் வழங்கிட சிறப்பு முகாம் : கலெக்டர் கோவிந்தராஜ் நேரில் ஆய்வு

7.May 2017

வேளாண் நோக்கத்திற்காகவும், மண்பாண்டம் செய்வதற்காகவும் வீடுகளுக்கு பயன்படுத்திடவும், விலையில்லாமல் பொதுமக்களுக்கு மண் ...

Image Unavailable

கரூர் மாவட்டத்தில் 86200 குழந்தைகளுக்கு தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் : கலெக்டர் கோவிந்தராஜ் தகவல்

28.Apr 2017

கரூர் மாவட்டத்தில் நாடு தழுவிய தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் இரண்டாம் தவணையாக 30.04.2017 (ஞாயிறு) அன்று ...

Image Unavailable

கரூர் மாவட்டத்திற்கான முன்னுரிமை கடனாக ரூ.3617 கோடி வழங்கிடும் கடன் திட்ட அறிக்கை : கலெக்டர் கோவிந்தராஜ் வெளியிட்டார்

26.Apr 2017

கரூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வங்கியாளர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், தலைமையில் நேற்று (26.04.2017) ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

புதிய காகிதம்

அச்சிட்டதை அழித்து மீண்டும் மீண்டும் 80 முறை வரை அச்சிடத் தகுந்த புதிய காகிதத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். நானோ பார்டிகல்ஸ் என்று அழைக்கப்படும் மிகச் சிறிய துகள்கள் மூலம் இந்தக் காகிதம் உருவாக்க‌ப்பட்டிருக்கிறது. அந்த துகள்களை அச்சிடும் மையில் கலந்து அச்சிட வேண்டும். அச்சிடப்பட்டு 5 நாட்களில் எழுத்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாக காகிதத்திலிருந்து மறையத் துவங்கும். காற்றிலுள்ள ஆக்ஸிஜன் துகள்கள் மையிலுள்ள எலக்ட்ரான்களை எடுத்துக்கொள்ளும், இதனால் எழுத்துக்கள் காகிதத்திலிருந்து மறையும். மேலும் காகிதத்தை சூடாக்கும் போது, இந்த செயல்முறையை சில நிமிடங்களில் வேகப்படுத்துவதன் மூலம் காகிதத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்.

காற்றில் இருந்து

சிலியில் இயங்கும் ஒரு நிறுவனம், காற்றில் இருந்து குடிநீரை உருவாக்கும் இயந்திரத்தைத் தயாரித்துள்ளது. பிரஷ் வாட்டர் எனப் பெயிடப்பட்டிருக்கும் இந்த இயந்திரம், ஈரப்பதமான காற்றை குளிர்வித்து வடிகட்டி குடிநீராக மாற்றுகிறது. இந்த கருவி பாலைவனங்களில், மலைப் பகுதிகளில் பேருதவியாக இருக்குமாம்.

அழியும் ஆபத்தில்...

இந்தியாவில் தற்போது 780 மொழிகளில், 400 மொழிகள் அடுத்த 50 ஆண்டுகளில் அழிந்துவிடும் அபாயம் உருவாகியுள்ளது என தி பீப்பில்ஸ் லிங்குஸ்டிக் சர்வே ஆப் இந்தியா மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், ஒவ்வொரு மொழி அழியும்போதும், அந்த கலாச்சாரமும் அழியும் ஆபத்துள்ளதாக அது தெரிவிக்கிறது.

புதுமையான வழியில்...

மிச்சிகன் மாநில ஆய்வாளர்கள் கோப்பிரவைடு மெட்டலிடிரன்ஸ் என்றழைக்கப்படும் பாக்டீரியாவில் இருந்து தங்கம் வெளிவருவதை  கண்டுபிடித்துள்ளனர். இந்தப் பாக்டீரியா தங்கம் உருவாகத் தேவைப்படும். கோல்டு குளோரைடு எனும் ரசாயன பொருட்களை விழுங்கி தங்கத்தை உமிழ்வதாக கண்டறிந்துள்ளனர்.

இப்படியும் ஒரு பெண்

சுமாரம் ரூ.2000 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ள மலேசிய கோடீசுவரர்  கோ கே பெங்கின் ஒரே மகளான ஏஞ்சலின் பிரான்சிஸ் கோ, தனது காதலுக்காக கோடிக்கணக்கான சொத்தை தியாகம் செய்து தனது காதலரை கைபிடித்து உள்ளார். இவரது காதலர் ஜடிடிஹா சாதரண தரவு விஞ்ஞானி (டேட்டா சைன்டிஸ்ட்) என்பதால் அவரது தந்தை ஏற்கவில்லை.

உடனடி தேடல்

கூகுள் நிறுவனம் இன்ஸ்டண்ட் சர்ச் வசதியை கடந்த 2010 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. குறிப்பாக மொபைல்களில் தேடலை விரைவாக வழங்குவதற்காகவே இன்ஸ்டண்ட் சர்ச் அறிமுகம் செய்யப்பட்டது. பயனாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இன்ஸ்டண்ட் சர்ச்-ஐ கூகுள் தற்போது நீக்கியுள்ளது.

மைக்ரோசிப்

அமெரிக்காவில் ஒரு நிறுவனம் அங்கு பணிபுரியும் ஊழியர்களின் உடலில் ஒரு ஊழியருக்கு 300 டாலர் செலவு செய்து மைக்ரோ சிப்களை பொருத்தியுள்ளது. இந்த சிப் அக்சஸ் கார்டு போன்று செயல்படுகிறது. அதாவது அலுவலகம் வரும்போது கதவுகளை திறப்பது, பன்ச் செய்வது, அவர்களுக்கான கணினியை பயன்படுத்துவது ஆகியவற்றுக்கு பயன்படுகிறது.

குழந்தை கல்லீரல்

பெரும்பாலும், மது அருந்துபவர்கள் கல்லீரல் பாதிப்புக்கு அதிகம் ஆளாகிறார்கள். உடலிலுள்ள மிகப் பெரிய உறுப்பான கல்லீரல் பல காரணங்களால் ஏற்படக்கூடிய தொற்றால் பாதிக்கப்படுகிறது. அமெரிக்காவில் மட்டும் 17,000 பேர் கல்லீரல் பாதிப்பால் அவதி படகின்றனர். இந்நிலையில், தற்போது கல்லீரலினை செயற்கையாக உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த கண்டுபிடிப்புக்கு குழந்தை கல்லீரல் என பெயரிட்டுள்ளனர். கல்லீரலை செயற்கையாக உருவாக்க ஆய்வின்போது,  மனித உயிரணுக்களில் இருந்து உயிரணுக்களை எடுத்து பயன்படுத்துகின்றனர். இந்த சோதனை வெற்றி பெற்றால் கல்லீரல் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

’ப்ளூ வேல்’ கேம்

உலக அளவில் பிரபலமாக வரும் ஆன்லைன் விளையாட்டான ப்ளூவேல், பங்கேற்பாளருக்கு பல்வேறு சவால்களை அளிக்கும். நாளொரு சவால் வீதம் 50 நாட்களுக்கு கொடுக்கப்படும். ஆரம்பத்தில் சவால்கள் எளிதாகவே இருக்கும். ஆனால், போகப்போக சவால்கள் கடினமாக்கப்படும். இறுதியில் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற சவால் விடுக்கப்படும். இந்த விளையாட்டுக்கு அடிமையாகும் இளைஞர்களை நிஜ உலகத்துடனான தொடர்பை இழக்க செய்து, விர்ச்சுவல் எனப்படும் மாய உலகத்துக்குள் அழைத்துச் சென்று தற்கொலை செய்யத் தூண்டுவதுதான் இதன்  நோக்கம். இந்த விளையாட்டை வடிவமைத்த ரஷ்யாவின் பிலிப் புடேய்கின் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மஞ்சளின் மகிமை

நரம்பு கட்டி புற்று நோயை குணப்படுத்தும் தன்மை மஞ்சளுக்கு உள்ளது என அமெரிக்க வாழ் இந்திய நிபுணர் தம்மாரா கண்டுபிடித்துள்ளார். இவரது ஆய்வில், மஞ்சளில் உள்ள மிக சிறிய ரசாயன பொருட்கள் மருந்தாகி நரம்பு கட்டி புற்று நோயை குணப்படுத்துவதாக தெரிய வந்துள்ளதையடுத்து, புற்று நோய் மருந்துகளில் மஞ்சளை சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

விந்தணு குறைவு

1973 - 2011-ம் ஆண்டுவரை மேற்கொள்ளப்பட்ட 185 ஆய்வுகளின்படி, வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் தொடர்ந்து ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கை பாதிக்கு பாதி குறைந்துள்ளதாம். இது நீடித்தால் மனித இனத்தின் அடையாளமே அழிந்து போகுமாம். ஆனால், ஆசியா, ஆப்பிரிக்காவில் இந்த அளவு பாதிப்பு இல்லையாம்.

சிறிய சாதனம்

‘ராஸ்பெர்ரி பை’ என்பது மலிவு விலையில் கிடைக்கக்கூடிய மிகச்சிறிய கணினி ஆகும். இதை அடிப்படையாகக் கொண்டு, நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறியக்கூடிய ‘ராஸ்பெர்ரி ஷேக் 4டி’  என்ற சாதனத்தை உருவாக்கியுள்ளனர். நிலநடுக்கத்தின்போது உருவாகும் கண்ணுக்குத் தெரியாத அசைவுகளைப் பார்ப்பதற்கும் இது உதவுகிறது. இதனால் நிலநடுக்கம் ஏற்படுவதை முன்பே நாம் கணிக்க முடியுமாம்.