எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரம், சபரிமலையில் தங்கம் மோசடி வழக்கில் முன்னாள் தேவஸ்தான உறுப்பினர் சங்கரதாஸை போலீசார் கைது செய்தனர்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் தங்கம் மோசடி தொடர்பான வழக்கை சிறப்பு புலனாய்வு குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் முதன்மை தந்திரி, முன்னாள் எம்.எல்.ஏ., திருவிதாங்கூர் தேவஸ்தான முன்னாள் தலைவர்கள் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் முன்னாள் தேவஸ்தான உறுப்பினரான சங்கரதாசும் சேர்க்கப்பட்டிருந்தார்.
இதற்கிடையே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சங்கரதாஸ் கைது செய்யப்படாத சம்பவத்திற்கு கேரள ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்து விமர்சனங்களை முன் வைத்தது.
மேலும் சங்கரதாசின் மகன் காவல் துறையில் உயர் பதவியில் இருப்பதால் அவரது கைதை தாமதம் செய்து வருவதாக அதிருப்தியையும் வெளிப்படுத்தியது. இதனை தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழுவினர் எஸ்.பி. சசிதரன் தலைமையில் மருத்துவமனைக்கு சென்று அவரை கைது செய்தனர். அதே சமயத்தில் அவரது உடல் நலம் கருதி மருத்துவர்கள் அறிவுரைப்படி அவர் மருத்துவமனையிலேயே தீவிர கண்காணிப்பில் உள்ளார். தங்கம் மோசடி வழக்கில் கைது செய்யப்படும் 12-வது நபர் சங்கரதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


